அமித்ஷா சொன்ன செய்தி! எஸ்பி.வேலுமணி போட்ட உத்தரவு!

Photo of author

By Sakthi

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகைக்கு பின்னர் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி அவர்கள் தன்னுடைய துறை அதிகாரிகளுக்கு ஒரு முக்கிய வாய்மொழி உத்தரவை பிறப்பித்து இருக்கின்றார்.

அனைவருக்கும் வீடு அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு உள்ளிட்ட இடங்களில் அதிக கவனம் செலுத்தவேண்டும் அனைத்து உள்ளாட்சி அமைப்பின் சார்பாகவும் இந்த திட்டங்களின் அதிகப்படியான பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் ஏவுகணையின் வாய்மொழி உத்தரவாக இருக்கின்றது இது சம்பந்தமாக கோட்டை வட்டாரத்தில் விசாரித்தபோது, மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் விவசாயம் விவசாயிகளின் நலன் உணவு பதனிடுதல் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சில நாட்களுக்கு முன்னர் டெல்லியிலிருந்து காணொளி மூலமாக மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கின்றார்.

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் சம்பந்தமாக இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்குபெற்ற தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தமிழகத்தில் ஊரக பகுதிகளில் மோடி வீடு என்று சொல்லப்படும் பிரதமர் வீட்டு வசதி திட்டம் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்ற பணிகள் சம்பந்தமாக எடுத்துரைத்தார்.

தமிழகத்தில் 2011-2020 வருடம் மழை உள்ளாட்சித் துறையின் சார்பாக நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளிலும் 17.08 லட்சம் பயனாளிகளுக்கு பல திட்டத்தின் மூலமாக வீடுகள் கட்டித் தரப்படுகின்றன என்பதையும் அமைச்சர் வேலுமணி தெரிவித்திருக்கின்றார். பிரதமரின் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் அனுமதி பெற்று மாநிலம் முழுவதும் விடுபட்ட தகுதி இருக்கின்ற 9.11 லட்சம் பயனாளிகளின் பெயர் மற்றும் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. எனவும் அதற்கான இரண்டாம் கட்ட இலக்கினை அடைவதற்கு அவாஸ் பிளஸ் பட்டியலில் இருந்து பயனாளிகளைத் தேர்வு செய்வதற்காக விரைவாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தெரிவித்து மத்திய ஊரக வளர்ச்சித் துறைக்கு கடிதம் அனுப்பப்பட இருக்கின்றது எனவும் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் குறிப்பிட்டிருக்கின்றார்.