ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சரை பங்கம் செய்த டிடிவி தினகரன்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பு மட்டுமல்லாமல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், 40-க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கின்ற ஒரு கட்சியின் தலைவர் இப்படி சுயபச்சாதாபம் தேடி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தப்பிக்க முயற்சி செய்யலாமா? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அரசு ஊழியர்கள் சங்கத்தின் 14வது மாநில மாநாட்டில் பங்கேற்றார், சென்னை மாதவரத்தில் இருக்கின்ற தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பங்கேற்று கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் நான் எப்போதுமே அதிகமாக பேச மாட்டேன் செயலில் தான் நம்முடைய திறமையை காட்ட வேண்டும். அரசு ஊழியர்கள் இல்லை என்றால் அரசாங்கம் இல்லை, திமுக ஆட்சி நடைபெறும் போதெல்லாம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு முன்னேற்றத்திற்கான ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என கூறினார்.

அரசு கஜானாவிற்கு வரவேண்டிய சரக்கு மற்றும் சேவை வரியை ஒட்டுமொத்தமாக மத்திய அரசு முடக்கி கொண்டது. நிதி நிலைமையை பொருத்தவரையில் மத்திய அரசிடம் கொத்தடிமைகளாக கையேந்தி நிற்கும் நிலைமையில்தான் மாநிலங்கள் இருக்கின்றன. ஜிஎஸ்டி முதல் வெள்ள நிவாரண நிதி வரையில் நமக்கு கொடுக்க வேண்டிய வரிகளை முழுமையாக மத்திய அரசு கொடுப்பதில்லை.

கொடுக்கப்படும் நிதியும் உரிய சமயத்தில் வழங்கப்படுவதில்லை என்று தெரிவித்தார். இந்த சூழ்நிலையில் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, தமிழ் நாட்டில் என்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆர் படத்தின் பாடல் தான் நினைவிற்கு வருகிறது என்று தெரிவித்து ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் டிடிவி தினகரன்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டிருக்கின்ற தன்னுடைய வலைதள பதிவில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அதை செய்து விடுவோம், இதை செய்து விடுவோம் என்று வீரவசனம் பேசிவிட்டு ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய அரசுக்கு கொத்தடிமையாக உள்ளோம் என்று புதிய வேஷம் போடுவது திமுகவின் வழக்கமாக உள்ளது என விமர்சனம் செய்திருக்கிறார் டிடிவி தினகரன். இவர்களுடைய இயலாமையை மறப்பதற்கு அன்று கருணாநிதி செய்ததை தற்போது ஸ்டாலினும் செய்கிறார். அரசு ஊழியர் சங்க மாநாட்டில் இப்படி ஒரு அடிமை ராகத்தை அவர் பாடி இருக்கிறார் என தெரிவித்திருக்கிறார் டிடிவி தினகரன்.

தமிழக அரசிற்கு 5 லட்சம் கோடி கடன் இருப்பது தேர்தல் சமயத்தில் தெரியாதா? இஷ்டபடி வாக்குறுதிகளை ஸ்டாலின் அள்ளி வீசியபோது தெரியாதா? தமிழ் நாட்டின் ஆட்சிப்பொறுப்பை மட்டுமல்லாமல் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் 40-க்கும் அதிகமான எம்பிக்களை வைத்திருக்கின்ற ஒரு கட்சியின் தலைவர் இப்படி சுய பச்சாதாபம் தேடி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தப்பிக்க முயற்சி செய்யலாமா? எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, தமிழ் நாட்டிலே, என்று எம்ஜிஆர் படத்தின் பாடல் தான் நினைவுக்கு வருகிறது என டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்.