AMMK: கடந்த சில வருடங்களாகவே டிடிவி தினகரனுக்கும், இபிஎஸ்க்கும் பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வருகிறது. அதிமுக, பாஜக கூட்டணியில் இணைய வேண்டுமானால் அண்ணாமலையை தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென இபிஎஸ் நிபந்தனை விதித்தார். இதனால் டிடிவி தினகரனும், அண்ணாமலையும் இணைந்து இபிஎஸ்யை எதிர்ப்பார்கள் என்று கூறப்பட்டு வந்தது.
தற்போது பாஜக கூட்டணியிலிருந்து விலகிய டிடிவி தினகரன் இபிஎஸ்யை தவிர வேறு யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினாலும் பாஜக கூட்டணியில் இணைவோம் என்றும், முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அனைவரையும் ஒரே மாதிரி நடத்தினார். ஆனால் தற்போதுள்ள தமிழக பாஜக தலைவர் இபிஎஸ்க்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து டிடிவி தினகரனை பாஜகவில் மீண்டும் இணையும் படி மத்திய அமைச்சர்கள் பலர் வலியுறுத்தியும் அவர் அதற்கு மறுத்து விட்டார். நேற்று கரூர் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஎபிஎஸ் இந்த துயர சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடி வருவதாகவும், எடப்பாடி பழனிசாமி பதவி வெறியில் பேசுவதாகவும் கூறியிருந்தார்.
மேலும் கரூர் சம்பவத்தை சதி என்று அண்ணாமலை கூறியது வருந்ததக்கது என்றும் கூறினார். பாஜகவிலிருந்து பிரிந்த போது அண்ணாமலையை நெருங்கிய நண்பன் என்றும், நாங்கள் தினமும் தொலைபேசியில் உரையாடி கொண்டு தான் இருக்கிறோம் என்று கூறியிருந்தார் டிடிவி தினகரன்.
அண்ணாமலைக்கும் பாஜகவிற்கும், உட்கட்சி பிரச்சனை இருந்தது அனைவரும் அறிந்த ஒன்று, இதனால் இவர்கள் இருவரும் ஒற்றுமையாக செயல்படுவார்கள், இல்லையென்றால் அண்ணாமலை புதிய கட்சி தொடங்கி டிடிவி தினகரனுடன் கூட்டணி அமைப்பார், அந்த கூட்டணி இபிஎஸ்யை வீழ்த்தும் என்றும் பேசப்பட்டது. இந்நிலையில் டிடிவி தினகரனின் இந்த பதில், அண்ணாமலைக்கும், அவருக்கும் ஏதோ பிரச்சனை உள்ளதை சுட்டி காட்டியுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.