
AMMK DMK: ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிமுகவின் முகமாகவும், ஜெயலலிதாவின் நம்பிக்கை குரியவராகவும் திகழ்ந்தவர் டிடிவி தினகரன். ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு, இபிஎஸ் முதல்வரானார். அப்போது இபிஎஸ்யால் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் போன்றோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அதனால் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியின் துரோகத்தை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.
பிறகு பாஜக உடன் கூட்டணி அமைத்த இவர் அண்மையில், நயினார் நாகேந்திரன் இபிஎஸ்க்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி கூட்டணியிலிருந்து விலகினார். இதனால் இவர் தவெக உடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கரூர் சம்பவத்திற்கு பின் தவெக, அதிமுக உடனான கூட்டணியில் சேர்வதற்கான சுழல் உருவாகியிருக்கிறது. இது டிடிவி தினகரனுக்கு பெரும் அபாயத்தை ஏற்படுத்த கூடும்.
இந்நிலையில், தருமபுரி மாவட்ட அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அரூரில் நடைபெற்றது. அப்போது பேசிய டிடிவி தினகரன், யாரும் எதிர்பார்த்திராத கூட்டணி அமையும் என்றும் சூசகமாக கூறியுள்ளார். அவர் கூறிய கூட்டணி, திமுக உடனானதாக தான் இருக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர். ஏனென்றால், அதிமுகவிற்கு பின் பெரிய கட்சியாக அறியப்படுவது திமுக தான்.
இதனை பின்னுக்கு தள்ள தற்போது தவெக வந்து விட்டதால் தவெகவை வைத்து இபிஎஸ்யை வீழ்த்தி விடலாம் என்று டிடிவி தினகரன் நினைத்தார். ஆனால் விஜய் அதிமுக உடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இதனால் இபிஎஸ் வீழ்த்த திமுக என்னும் ஆயுதத்தால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்த தினகரன் அக்கட்சியுடன் கூட்டணி அமைப்பார் என்றும் சொல்லப்படுகிறது.