அதிமுக கூட்டணியில் வெடிக்க போகும் பூகம்பம்.. பாஜக தலைவர் கொளுத்தி போட்ட வெடி!!

0
153
An earthquake is about to explode in the AIADMK alliance.. BJP leader lit an explosion!!
An earthquake is about to explode in the AIADMK alliance.. BJP leader lit an explosion!!

ADMK BJP: தமிழ்நாட்டில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலை, தேசிய கட்சியான பாஜக, அதிமுக உடன் கூட்டணி அமைத்து சந்திக்க உள்ளது. பீகாரில் மாபெரும் வெற்றி பெற்ற NDA கூட்டணி அடுத்ததாக தமிழக தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறது. அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தேர்தலை கருத்தில் கொண்டு இணைந்த இரு கட்சிகளிடையேயும், இப்போதும் கூட சில சச்சரவுகள் நிலவி வருகின்றன. அதில் முக்கியமானது ஆட்சி அதிகாரத்தில் பங்கு.

கூட்டணி அமைத்திலிருந்தே இந்த கோரிக்கையை பாஜக முன் வைத்து வருவதாக தகவல் வெளியானது. தமிழகத்தில் கூட்டணி என்பது வெற்றி பெரும் வரை தான். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற மரபே கிடையாது என அதிமுகவை சேர்ந்தவர்கள் கூறி வந்தனர். ஆனால் பாஜகவை சேர்ந்தவர்களோ அதிமுக வெற்றி பெற்றால் அங்கு பாஜகவும் ஆட்சி அமைக்கும் என்று மறைமுகமாக கூறி வந்தனர். இது தொடர்பான விவாதம் இபிஎஸ்க்கும், பாஜக தலைமைக்கும் எழுந்த வந்தது.

இந்நிலையில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான, வானதி சீனிவாசனிடம் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சியா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா என்பது குறித்து 2026 தேர்தலுக்கு பின் பேசலாம் என்று பதிலளித்துள்ளார். அதிமுக, கூட்டணி ஆட்சியை அறவே மறுத்து வரும் சமயத்தில், பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் இது குறித்து கேள்விக்கு கூட்டணி ஆட்சி தான் என்பது போன்ற தொணியில் பதிலளிப்பது இபிஎஸ்க்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

Previous articleதேசிய திராவிட கட்சிகள் வேண்டாம்.. விஜய் எடுத்த அதிரடி முடிவு!! ஆட்டம் காணும் தேர்தல் களம்!!
Next articleமாம்பழத்தை பறித்த தேர்தல் ஆணையம்.. கடும் சிக்கலில் பாமக!! உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு!!