அண்ணா பல்கலைக்கழக இறுதிசெமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:! கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Photo of author

By Pavithra

அண்ணா பல்கலைக்கழக இறுதிசெமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:! கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Pavithra

அண்ணா பல்கலைக்கழக இறுதிசெமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:! கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்!

ஏப்ரல் மே மாதத்தில் இறுதி செமஸ்டர் எழுதக்கூடிய மாணவர்களுக்கும்,இறுதி செமஸ்டர் தேர்வில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கும்,வருகின்ற செப்டம்பர் 22- ஆம் தேதி முதல் ஆன்லைனில் தேர்வு நடைபெற உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

செய்முறை தேர்வுகள் வரும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறும் என்றும்,அதற்குமேல் எழுத்துத் தேர்வுகள் 29ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

கொரோனா பாதிப்பினால்,இறுதி செமஸ்டர் தேர்வு எப்பொழுது என்றே தெரியாமல்,தேர்வுக்கு கட்டணம் செலுத்தாமல்,விண்ணப்பிக்க தவறவிட்ட மாணவர்களுக்கும் தற்போது ஒரு வாய்ப்பினை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.வருகின்ற செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதிக்குள்,இறுதி பருவத் தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் இறுதி பருவத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது.