ரீல்ஸ் செய்யும் பொழுது 300 அடி பள்ளத்தில் விழுந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்! மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்தது! 

Photo of author

By Sakthi

ரீல்ஸ் செய்யும் பொழுது 300 அடி பள்ளத்தில் விழுந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்! மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்தது!
சுற்றுலா சென்ற இடத்தில் ரீல்ஸ் எடுக்கும் பொழுது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்த  இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் பிரபலம் அன்வி காம்தர் அவர்கள் தனது நண்பர்களுடன் சேர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள கும்பே அருவிக்கு சுற்றுலா சென்றார். இதையடுத்து இன்ஸ்டா பிரபலம் அன்வி காம்தர் அவர்கள் வழக்கம் போல ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது அன்வி காம்தர் அவர்கள் எதிர்பாராத விதமாக 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். இதை கண்ட இவருடைய நண்பர்கள் அனைவரும் காப்பாற்ற முயற்சி செய்தும் முடியாததால் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
காம்தரின் நண்பர்கள் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினரும், உள்ளூர் மீட்புப் படையினரும் அன்வி காம்தர் அவர்களை மீட்க சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் 6 மணி நேரம் போராடிய மீட்புப் படையினர் அன்வி காம்தர் அவர்களை பலத்த காயங்களுடன் உயிருடன் மீட்டனர்.
இதையடுத்து சிகிச்சை அளிக்க அன்வி காம்தர் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அன்வி காம்தர் அவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது. அன்வி காம்தர் அவர்களின் மறைவு இவருடைய ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பட்டயக் கணக்காளராக பணியாற்றி வரும் அன்வி காம்தர் அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஊடக செல்வாக்கு உடையவர். 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இரசிகர்கள் இவரை பின் தொடர்கின்றனர் என்பது குறிப்படத்தக்கது.