gold:தங்கத்தின் விலை குறைந்து கொண்டே செல்லும் ஆனந்த் சீனிவாசன் விளக்கம்.
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் இறுதி வரை தங்கம் விலை கிடுகிடு வென உயர்ந்தது. ஒரு சவரன் தங்கம் விலை 60 ஆயிரத்தை கடந்து விடும் என்று நிபுணர்கள் கணித்தார்கள். அந்த வகையில் கடந்த மாதம் 31ம் தேதி தங்கத்தின் விலை ரூ 59 ஆயிரத்து 640 வரை விலை உயர்ந்தது.இந்த நிலையில் தான் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பை உயர்த்தி இருக்கிறது.
அதாவது கடந்த 10 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,280 குறைந்துள்ளது. அதாவது அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் தேர்வு செய்யப்பட அடுத்த நாள் நவம்பர்-6ஆம் தேதி தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.1,320 சரிந்து, ஒரு கிராம் ரூ 7 ஆயிரத்து 200-க்கும் , ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்து 600 க்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் 31ம் தேதி தங்கத்தின் விலை ரூ 59 ஆயிரத்து 640 இருந்து , மேலும் கடந்த 7ம் தேதி ரூ.58 ஆயிரம் ரூபாய்க்கு குறைந்து.
நேற்று முன் தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இது மேலும் குறைந்து ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து இன்று சவரன் ரூ.56 ஆயிரத்து 360 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.40 ரூபாய் குறைந்து ரூ.7,045க்கு விற்பனையாகிறது. மேலும் தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளது என பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்து இருக்கிறார். இது தங்கம் வாங்க சிறந்த நேரம் இது என குறிப்பிட்டுள்ளார்.