கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியிலிருக்கின்ற தனியார் பள்ளியில் படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சூழ்நிலையில், அவருடைய இறப்பில் சந்தேகமிருப்பதாக தெரிவித்து பெற்றோர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அந்தப் போராட்டம் வன்முறையாக வெடித்தது. இது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் உள்ளிட்டோர் நேற்று மாணவியின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்திலிருக்கின்ற அவருடைய வீட்டிற்கு சென்று மாணவியின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி விட்டு மாணவியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்கள்.
அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவியின் மரணம் குறித்து தகவல் வந்த போது நோய் தொற்று பாதிப்பு காரணமாக, பாதிப்படைந்து மருத்துவமனையில் இருந்ததாகவும், தகவலறிந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார்.
அதோடு மாணவியின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், நம்புவதாக தெரிவித்த அவர், மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மாணவியின் தாய் செல்வியிடம் தொலைபேசியில் உரையாற்றினார் என்றும், அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.