PMK: சமீப காலமாகவே பாமக-வில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடும், தலைமை போட்டியும் நிலவி வந்தது. இதனை தொடர்ந்து கட்சியின் தலைமை நான் தான் என்பதை நிலை நிறுத்தும் வகையிலும், உலகுக்கு தெரியப்படுத்தும் வகையிலும், ராமதாஸ் அன்புமணியை கட்சியின் அனைத்து பதவிகளில் இருத்தும் நீக்கினார்.
இந்த பதவி நீக்க அறிவிப்பு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கட்சி இரண்டாக பிளவுப்பட்டு இருக்கிறது. இதில், முன்னாள் எம்.பி. பாலு, “அனைத்து அதிகாரமும் அன்புமணியிடம் தான் உள்ளது என்றும், அவர் விரும்பினால் எவரையும் உயர்த்தவும் முடியும், தாழ்த்தவும் முடியும்” என்று கூறியுள்ளார்.
இதன் மூலம், அன்புமணியின் கையில் தான் பா.ம.க.வின் எதிர்காலம் நிலைத்திருக்கும் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார். ஆனால் இதற்கு மாற்று கருத்தாக, கட்சியின் பொதுச்செயலாளர் முரளி சங்கர், “ராமதாஸ் எடுக்கும் முடிவு தான் இறுதியானது. அன்புமணிக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும் , அதற்கான அதிகாரம் ராமதாஸிடம் மட்டுமே உள்ளது” எனக் கூறியுள்ளார்.
இதன் மூலம், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தான் கட்சியின் தலைமையில் நீடித்திருப்பார் என்பது தெளிவாகிறது. இந்த கருத்து வேறுபாடுகள் பாமக-வின் விரிசலுக்கு மேலும் தீனிபோடும் விதமாக அமைந்திருப்பதாகவும் கருதப்படுகிறது.