நீ தான் விளக்கு பிடிச்சயா! ஸ்டாலினுக்கு எதிராக மாவீரன் குருவை போல சரவெடியாய் அதிரடி காட்டிய அன்புமணி ராமதாஸ்

Photo of author

By Ammasi Manickam

நீ தான் விளக்கு பிடிச்சயா! ஸ்டாலினுக்கு எதிராக மாவீரன் குருவை போல சரவெடியாய் அதிரடி காட்டிய அன்புமணி ராமதாஸ்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் அவர்களை ஆதரித்து பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.அதில் அவர் பேசியதாவது.

நாம் கூட்டணியில் உள்ள அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.இந்த தேர்தலில் கட்டாயம் நாம் வெற்றி பெற்றாக வேண்டும் காரணம் இது ஒரு வித்தியாசமான தேர்தல்.இந்த இடைத் தேர்தல் நம்முடைய மண்ணில் நடக்கிறது,இது என்னுடைய மண்,என்னுடைய மக்கள்,என்னுடைய மாவட்டம்,தியாகம் செய்த இந்த மண்.இந்த மண்ணில் நடைபெறும் இந்த தேர்தலில் மருத்துவர் அய்யா சொல்கின்ற வேட்பாளர் வெற்றி பெற்றாக வேண்டும்.இது அவருடைய அன்பு கட்டளை.

இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று ஸ்டாலின் முகத்தில் கரியை பூச வேண்டும். இது நமக்கும் ஸ்டாலினுக்கும் நடைபெறுகிற போட்டி.ஸ்டாலினுக்கு ஒரு புதிய பெயரை வைத்திருக்கிறேன் அது புளுகு மூட்டை ஸ்டாலின், ஏனென்றால் அவர் வாயை திறந்தாலே போய் தான்.பொய்யை தவிர வேறு எதுவுமில்லை.

கடந்த மக்களவை தேர்தலில் அவ்வளவு பொய்யை சொன்னார்கள்.அதில் முக்கியமான பொய் நாங்கள் வெற்றி பெற்றால் நடைக்கடன் தள்ளுபடி செய்வோம் என்றார்.இங்கு யாருக்காவது தள்ளுபடி செய்திருக்கிறாரா? இருக்கின்ற 39 மக்களவை தொகுதிகளில் 38 இல் மிகப்பெரிய வெற்றி பெற்றார்.மக்கள் அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தனர்.ஆனால் அவர் வாக்குறுதியை நிறைவேற்றினாரா? அவரால் நிறைவேற்ற முடியுமா? அவரால் சட்டையை மட்டும் தான் கிழிக்க முடியும்.வேறு எதையும் கிழிக்க முடியாது.

அதே போல ஸ்டாலின் சொல்லியது விவசாய கடனை தள்ளுபடி செய்வோம்,கல்விக்கடன் தள்ளுபடி செய்வோம்.இங்கு யாருக்காவது விவசாய கடனை தள்ளுபடி செய்திருக்கிறாரா? கல்விக்கடன் தள்ளுபடி செய்திருக்கிறாரா? ஒண்ணுமே செய்யவில்லை.அவர் சொல்வதெல்லாம் பொய்.அதனால் தான் புளுகு மூட்டை ஸ்டாலின்.

தேர்தல் வந்தாலே ஸ்டாலினுக்கு வன்னியர் மீது பாசம் வந்து விடும். தேர்தல் முடிந்தது என்றால் அதுவும் முடிந்து விடும்.இப்போ இங்கு இடைத்தேர்தல் அதனால் திடீர் வன்னியர் மீது பாசம் வந்துள்ளது.ஸ்டாலின் அவர்களே உங்களுக்கும் வன்னியர்களுக்கும் என்ன சம்பந்தம்.இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவதாக கூறியுள்ளீர்கள்.கடந்து 50 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்,உங்கள் தந்தை 5 முறை முதலமைச்சர்,நீங்கள் ஒரு முறை துணை முதல்வர் அப்போ என்ன கிழித்தீர்கள். கருணாநிதி முதல்வராக இருந்த போது மருத்துவர் ராமதாஸ் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்ட போது எல்லாம் இந்த மக்கள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? இப்போ விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மட்டுமே வன்னியர்கள் மீது ஆசை,பாசம் எல்லாம் வந்துள்ளது.

ஏ.கோவிந்தசாமி
இந்த மாவட்டத்தை சேர்ந்தவரும்,முதன் முதலில் இங்கு போட்டியிட்ட வருமான நமது மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ஏ.கோவிந்தசாமி என்பவர் தான் திமுகவிற்கு உதய சூரியன் சின்னதையே கொடுத்தவர்.அப்படிப்பட்ட ஏ.ஜி க்கு 1967 இல் திமுக முதன் முறையாக ஆட்சியமைத்த போது அமைச்சர் பதவி கொடுக்க மாட்டேன் என பிரச்சினை செய்தார்கள்.பிறகு தகராறு பண்ணி ஏதோ ஒரு அமைச்சர் பதவி, பொறுப்பு வழங்கினார்கள். இப்போ ஸ்டாலினுக்கு ஏ.கோவிந்தசாமி மீது திடீரென்று பாசம் வந்து விட்டது.இந்த இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவாராம்.ஆனால் அது நடக்க போவதில்லை.ஏனென்றால் திமுக வெற்றி பெறவே போவதில்லை. அது முடிஞ்சு போச்சு.

ஏன் திமுக ஆட்சிக்கு வந்து தான் ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டுமா? இப்போ நம் மாவீரன் குருவிற்கு நாம் கட்டவில்லையா? சொல்லியபடி 9 மாதத்தில் கட்டி முடிக்க வில்லையா? இதுக்கு நாங்க ஆட்சிக்கு வர வரைக்கும் காத்து கொண்டு இருந்தோமா? கலைஞருக்கு நினைவு மண்டபம் மட்டும் இப்பவே கட்டுவார்கள் ஆனால் ஏ.ஜி க்கு மணிமண்டபம் கட்ட மட்டும் இவர்கள் ஆட்சிக்கு வர வேண்டுமா? ஏன் இவர்களிடத்தில் பணமில்லை யா? இவர்கள் தானே கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட்,கொங்கு நாடு முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளுக்கு 40 லிருந்து 50 கோடி பணத்தை கொடுத்தார்கள்.

ஆனால் போன தேர்தலில் நம்மை பேசுகிறார்கள்,அவர்கள் பெட்டி வாங்கி விட்டார்கள் என்று சொல்கிறார்கள்.ஏன் நீ தான் விளக்கு புடிச்சயா அப்போ? நீ தான் கூட இருந்தயா? ஏதோ கூட இருந்தா மாதிரியே பேசுற. யோவ் நாங்க முப்பது ஆண்டு காலமாக நேர்மையாக அரசியல் நடத்தி வந்து கொண்டிருக்கிறோம். இனியும் நேர்மையாக தான் கட்சி நடத்துவோம்.காசு சம்பாதிக்க வேண்டும் என்றால் எப்படி வேண்டுமென்றாலும் சம்பாதித்து இருக்கலாம். இந்த டொபாகோ லாபி,லிக்கர் லாபி,குட்கா லாபி, பார்மா என யார் கிட்ட வேண்டுமென்றாலும் காசு வாங்கியிருக்கலாம்.ஆனால் எங்களுக்கு அதெல்லாம் தேவையில்லை.மக்கள் பிரச்சினைகளுக்காக போராடுவது,இளைஞர்களை நல்வழிப் படுத்துவது மட்டும் தான் எங்களுடைய இலக்கு.

ஒரு எம்பி தொகுதியில் 70 லட்சம் தான் செலவு செய்ய வேண்டும் ஆனால் 2 தொகுதிகளுக்கு 15 கோடி கொடுக்கிறார்கள்.ஏனென்றால் எல்லாம் லஞ்சம்,கொள்ளையடித்த பணத்தை லஞ்சமாக கொடுக்கிறார்கள்.இவர் நம்மை பற்றி பேசுகிறார்.அய்யாவை பற்றியோ,நம்மை பற்றியோ பேசுவதற்கு இவருக்கு தகுதியும் இல்லை,அருகதையும் இல்லை என்றும் அவர் காட்டமாக பேசினார்.வன்னியர் சங்க தலைவரும்,மறைந்த பாமக நிர்வாகியான மாவீரன் குரு அவர்களை போல சரவெடியா அதிரடி காட்டிய அன்புமணி ராமதாஸ் அவர்களின் இந்த பேச்சுக்கு அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.