ஆசிரியர்களை விடுதி காப்பாளர்களாக நியமிப்பதா!! அன்புமணி ராமதாஸ் கண்டனம்!!

Photo of author

By Sakthi

Department of Education:விடுதி காப்பாளர் பணிக்கு ஆசிரியர்களை  நியமிப்பதற்கு  அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

பள்ளி கல்வித்துறை இயக்குனர் சமீபத்தில் கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுற்று அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1351 விடுதிகளில் 497 விடுதி காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அதனை நிரப்ப இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள விருப்பமுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்து இருந்தது.

ஏற்கனவே தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் பற்றக் குறை இருக்கிறது. இந்த நிலையில் விடுதி காப்பாளர் பணிக்கு ஆசிரியர்களை நியமிப்பதா?, 497 ஆசிரியர்களின் சம்பளத்தை மிச்சப்படுத்தி இந்த அறிக்கையை கல்வித் துறை வெளியிட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. எத்தனை எதிர்த்தும் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள்.

இது பற்றி செய்தியாளர்கள்  எழுப்பிய கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கூறியதாவது  இந்த அறிக்கை பற்றி தனக்கு தெரியாது என்றும், விசாரித்து சொல்கிறேன் என கூறி இருந்தார். இவ்வாறாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

பள்ளி கல்வித்துறை இயக்குனர்  கடந்த 7ஆம் தேதி இந்த சுற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இருந்த போதிலும் அதை பற்றி தெரிய வில்லை என்று சொல்வது முரணாக இருக்கிறது. இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார் அதில் பிற்படுத்தப்பட்டோர்  நல வாரியம் வார்டன் பணிக்கான அறிவிப்பு செப்டம்பர் 23 வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் 44 நாட்கள் கழித்து தான் பள்ளி கல்வித்துறை இயக்குநர்  கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுற்று அறிக்கை அனுப்பியுள்ளார். இந்த காலகட்டத்தில் பள்ளி கல்வி துறையில் இது பற்றி விவாதங்கள் நடைபெற்று இருக்காதா?  என்ற கேள்வியை முன் வைக்கிறார். மேலும் அரசு பள்ளிகளில் காலியாக  உள்ள ஆசிரியர் பணிகளை நிரப்ப அரசு நிதியை ஒதுக்கி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார்.