ரேஷன் கடைகளில் ரூ.1900 கோடி ஊழல்!! அன்புமணி ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!!

Photo of author

By Sakthi

ரேஷன் கடைகளில் ரூ.1900 கோடி ஊழல்!! அன்புமணி ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!!

Sakthi

Anbumani Ramdas sensational allegation that 5.2 lakh tons of rice to be distributed to the people has been left out of the accounts

Anbumani Ramadoss:மக்களுக்கு வழங்க வேண்டிய 5.2 லட்சம் டன் அரிசி கணக்கில்  இருந்து விடுபட்டுள்ளது அன்புமணி ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு.

தமிழக அரசு நியாயவிலைக் கடைகளில் பயனாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரிசி மற்றும் கோதுமை போன்ற பொருட்களை முறையாக உரிய பயனர்களுக்கு சேராமல் இருக்கிறது. இவ்வாறாக கடந்த 2022-23 ஆம் ஆண்டு நாடு முழுவதும் சுமார் ரூ.69,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் ரேஷன் அட்டை தாரர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்துள்ளது.

அதாவது ஒரு நியாயவிலைக் கடையில் உள்ள ரேஷன் அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பொருட்கள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தான் விலைக் கடையில் உள்ள பொருட்களை ஒரு அட்டைதாரர் வாங்க வில்லை என்றால், அவருக்கு உரிய பொருட்கள் தவறான வழியில் விற்பனை செய்யப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பொது மக்களால் வைக்கபடுகிறது. மேலும் ரேஷன் அட்டை தாரர்களுக்கு முறையாக வழங்கப்படும் பொருட்கள் சரி வர வழங்கப்படுவது இல்லை என தகவல்கள் வெளியாகிறது.

இது போன்ற செயல்களால் மட்டுமே  தமிழக அரசுக்கு ரூ.1900 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. என சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய ஆராய்ச்சி குழு (Indian Council for Research on International Economic Relations) என்ற பொருளாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வருகிறது. மேலும் இது போன்ற முறையற்ற வழியில் ரேஷன் அரிசியை வழங்கியதால் மக்களுக்கு வழங்க வேண்டிய 5.2 லட்சம் டன் அரிசி கணக்கில்  இருந்து விடுபட்டுள்ளது.

மேலும்  ரேஷன் கடைகளில் வழங்கப்பட வேண்டிய அரிசியின் அளவில் சுமார் 15.80 சதவீதம் வழங்கவில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து  அன்புமணி ராமதாஸ்  அவர்கள் தமிழக அரசின் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார். மேலும் இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.