பாமக-பாஜக கூட்டணிக்கு கிரீன் சிக்னல் காட்டிய அன்புமணி.. அப்போ ராமதாஸின் நிலைப்பாடு!!

0
144
Anbumani who gave the green signal to the BMC-BJP alliance.. But Ramadoss's position!!
Anbumani who gave the green signal to the BMC-BJP alliance.. But Ramadoss's position!!Anbumani who gave the green signal to the BMC-BJP alliance.. But Ramadoss's position!!

PMK BJP: சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள் வலுப்பெற தொடங்கியுள்ள நிலையில், எந்த கட்சி யாருடன் கூட்டணி வைக்கும் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக-அதிமுக கூட்டணி ஒரு வருடத்திற்கு முன்பே உறுதியான நிலையில், மீதமிருக்கும் கட்சிகளான தேமுதிக, பாமக தவெக போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் பணியில் இபிஎஸ் தீவிரம் காட்டி வருகிறார். அதிமுக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சீட் தருவதாக கூறி ஏமாற்ற விட்டதாக பிரேமலதா கூறியிருந்தார்.

அதனால் இந்த முறை யார் அதிக தொகுதிகளையும், எம்.பி பதவியையும் தருகிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி என்பதில் உறுதியாக  உள்ளார். இவருக்கு அடுத்தது கரூர் சம்பவத்தை வைத்து தவெகவை கூட்டணியில் சேர்க்க வேண்டுமென அதிமுக காய் நகர்த்தி வருகிறது. ஆனால் விஜய் அதற்கு பிடி கொடுக்காமல் இருக்கிறார். ஆனாலும் விஜய்யை சமாதானம் செய்யும் முயற்சியில் அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் இறங்கியுள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க, பாமகவை திமுக கூட்டணியில் சேர்க்க விடக்கூடாது என்று நினைத்த இபிஎஸ் தந்தை மகன் சண்டையை பொருட்படுத்தாமல் இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வந்தார்.  முதலில் அன்புமணி இடம் பேச்சு வார்த்தை நடத்தினார் இபிஎஸ். இதற்கு அன்புமணி 40 தொகுதிகளை கேட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை நலம் விசாரிக்க சென்ற இபிஎஸ் சுமார் அரை மணி நேரம் பேசினார்.

இவருக்குப் பின் நயினாரும் ராமதாசை சந்தித்து நலம் விசாரித்தார். இவர்கள் இருவரின் தனி தனி சந்திப்பு சந்தேகத்தை  ஏற்படுத்தியது. இது குறித்து இபிஸ்யிடம் கேட்ட போது அதை பற்றியெல்லாம் விளக்கமாக கூற முடியாது என்று கூற முடித்தார். இவற்றின் இந்த பதிலே கூட்டணியை உறுதி செய்ததற்கான அறிகுறி என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பைஜன் பாண்டா பனையூரில் உள்ள அன்புமணியின் இல்லத்திற்கு நேரடியாக சென்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசி இருக்கிறார்.

இதில் கூட்டணி குறித்து பேசப் பட்டதாகவும், அதற்கு அன்புமணி சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வந்துள்ளது. இன்னும் மீதமிருப்பது ராமதாஸ் மட்டும் தான். அவரையும் கூட்டணி வரவழைத்து விட்டால் 2026 தேர்தலில் ஆட்சி நம் கையில் என அதிமுக நினைக்கிறது. ஆனால் அன்புமணி பாஜக கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்திருக்கும் நிலையில் ராமதாஸ் இதற்கு மறுப்பு தெரிவிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. 

Previous articleசாதி ஆவண கொலைக்கு எதிரான சட்டம்.. ஆணையத்தை அறிவித்த முதல்வர்!!
Next articleதமிழக வெற்றிக் கழகம் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல.. தேர்தல் ஆணையம் தகவல்!!