இதனால் இப்படியும் நடக்கும்! உஷார் தமிழக மக்களே!
கொரோனாவின் காரணமாக தூய்மையாக இருக்க வேண்டும் எனவும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றும், உலக சுகாதார நிறுவனமும் பரிந்துரைக்கின்றன.
எனவே மக்கள் சனிடைசர் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.அதில் தற்போது இதை பயன்படுத்தியதால் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மேரிலாந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. புகைப்பிடிக்கும்போது சானிட்டரை பயன்படுத்தியதால் இந்த தீ விபத்து நடந்தது என கூறப்படுகிறது. தீயணைப்பு துறை தந்த அறிக்கையின்படி, வண்டி ஓட்டுனர், வண்டி ஓட்டும் போது புகைப்பிடிக்க நினைத்துள்ளார்.அப்போது கையை சுத்தம் செய்ய சானிட்டைசரை பயன்படுத்தியதன் விளைவால், முழு காரும் தீ விபத்துக்குள்ளாகி உள்ளது தெரியவந்தது. மேலும், கார் முழுவதும் பற்றி எரியும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாண்ட்கோமெரி கவுண்டியின் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை குழுவின் செய்தியாளர் மற்றும் தகவல் தொடர்பாளர் தனது டிவிட்டரில் இது குறித்து கூறும் போது வாகனத்தில் செல்லும்போது காரின் உள்ளே முதலில் புகைப்பிடிப்பதே தவறான விஷயம்.
அந்த நபரோ புகைபிப்பது மட்டும் இல்லாமல் அதற்கு முன் சானிடைசர் பயன்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் சானிட்டைசர் பயன்படுத்துவது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார். மேலும் அந்த காரில் நெருப்பு பற்றி எரியும் வீடியோவையும் அவர் பகிர்ந்து உள்ளார். மேலும், அந்த ஓட்டுநர் தனது கைகள் மற்றும் உள் தொண்டைகளில் தீக்காயங்களை அடைந்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.
மேலும் சமைக்கும் போதும், விளக்கு ஏற்றும் போதும் அனைவரையும் சானிடைசர் உபயோகிக்க வேண்டாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.