ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு அதிகமாக இருக்கும் என்று பெயரெடுத்த ஒரு கட்சி தான் திமுக.
அந்த கட்சி கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் தமிழகத்தில் வரலாறு காணாத மின்வெட்டு நிகழ்ந்தது. இதனால் பொது மக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.
எந்தவித அறிவிப்புமின்றி நாள்தோறும் மின்சாரம் தடைபட்டதால் பல்வேறு சிரமங்களை அப்போது பொதுமக்கள் அனுபவித்து வந்தார்கள்.
அப்போது ஆளும் கட்சியாக இருந்த திமுக மீது பொதுமக்கள் கடுமையான அதிருப்தியில் இருந்து வந்தார்கள்.
பொதுமக்கள் திமுக மீது வைத்திருந்த அதிருப்தி எந்த அளவிற்கு உறுதியானது என்றால் அடுத்த 10 ஆண்டு காலத்திற்கு தமிழக அரசியலில் அந்த கட்சி மிக பலத்த அடி வாங்கியது.
அடுத்த 10 ஆண்டு காலங்களில் வந்த 2 தேர்தல்களிலும் அந்த கட்சி மண்ணை கவ்வியது. அந்தளவிற்கு பொதுமக்கள் திமுக மீது இந்த மின்தடை பிரச்சினையின் காரணமாக. கடும் கோபத்திலிருந்தார்கள்.
இந்தநிலையில். திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் சார்ந்தவர் குப்பன் இவர் மணவாள நகர் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் அதாவது லைன் மேனாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் அடிக்கடி மின் வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளானார்கள்.
அதே போன்று நேற்று இரவு வழக்கம் போல மணவாளநகர் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் தடைபட்டு இருக்கிறது இதனை அறிந்து கொண்ட மின்வாரிய ஊழியர் அங்கு சென்று சீரமைக்கும் பணியை முன்னெடுத்தார்.
அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் தங்கள் பகுதியில் அடிக்கடி மின்தடை உண்டாகிறது அது ஏன் ஏன் இதனை சீர் செய்யவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர்கள் அலுவலகத்திலிருந்த கணினி, நாற்காலிகள், உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி மின்வாரிய ஊழியர் குப்பனை இரும்பு கம்பியால் தலையில் தாக்கி விட்டார்கள்.
இதில் மின்வாரிய ஊழியருக்கு தலையில் பலத்த காயம் உண்டாகி கீழே விழுந்தார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மருத்துவர்கள் தலையில் 7 தையல் போட்டு சிகிச்சையளித்து வருகிறார்கள்.
இதுதொடர்பான தகவலையறிந்த மணவாளநகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மர்ம நபர்கள் தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.