திட்டமிட்டபடி தன்னுடைய ஆலோசனைக்கான வேலைகளை ஆரம்பித்த யுடன் அழகிரி! கலக்கத்தில் ஸ்டாலின்!

0
128

இனி திமுகவில் இணைவதற்கான வாய்ப்பு அறவே இல்லை என்றும் ,ஜனவரி மாதம் 3 ஆம் தேதி தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்து தனி கட்சி தொடங்குவது தொடர்பாக முடிவெடுப்பேன் என்று அறிவித்திருந்தார் அழகிரி.

இந்த நிலையில், அழகிரி தலைமையில் நாளைய தினம் நடைபெற இருக்கின்ற ஆலோசனை கூட்டத்திற்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன இதனை அவருடைய நெருங்கிய ஆதரவாளர் தெரிவித்திருக்கிறார்.

திமுக சார்பில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் அழகிரி. மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தார். திமுக தென் மண்டல பொறுப்பாளராக பதவி வகித்து வந்த அவர் கட்சியின் தனி செல்வாக்குடன் செயல்பட்டு வந்தார். திடீரென்று பல்வேறு அரசியல் காரணங்களுக்காக கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து கூட அழகிரி நீக்கப்பட்டார். ஆனாலும் கூட மறுபடியும் கட்சியில் இணைவதற்காக பல முயற்சிகளில் அவர் ஈடுபட்டு பார்த்தார். ஆனாலும் அவருடைய முயற்சிகள் எதுவும் பலனளிக்காமல் போனது.

திமுக தலைவர் கருணாநிதி இறப்பிற்குப் பின்னர் மறுபடியும் அவர் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட போகிறார் என்று தகவல்கள் வெளிவந்தன. ஆனால் திமுகவின் தலைமை ஆசிரியை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. கட்சிப்பணி கிடைத்தால் எந்த எதிர்ப்பும் இல்லாமல் வந்து பணி செய்யத் தயாராக இருக்கின்றேன் என்று அழகிரி தெரிவித்து வந்தார். ஆனாலும் கூட அதிமுக தலைமை அதனை பெரிதாக கருதவில்லை. இதன் காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய இல்லத்தில் தன்னுடைய ஆதரவாளர்களோடு ஆலோசனை செய்தார் அழகிரி.

அந்தக் கூட்டத்திற்கு பிறகு அழகிரி தொடர்ச்சியாக அமைதியாகவே இருந்து வந்தார். திடீரென்று நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்க இருப்பதாக வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, அவருடைய நெருங்கிய நண்பரான அழகிரியும் தானும் இனி திமுகவின் இணைவதற்கான வாய்ப்புகளே இல்லை என்றும் ஜனவரி மாதம் 3 ஆம் தேதி தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி தனிக்கட்சி தொடர்பாக முடிவெடுப்பேன் தெரிவித்தார். அதோடு ரஜினிகாந்த் விரைவில் சந்திக்க இருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில், திடீரென்று நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை என்று பின்வாங்கி விட்டார்.

இருந்தாலும் அழகிரியை தன்னுடைய திட்டமிடலில் மிக உறுதியாக இருக்கின்றார். திட்டமிட்டபடி ஆலோசனை கூட்டமானது நடக்கும் எனவும் எந்த வகையிலும் எங்களுடைய ஆலோசனைக் கூட்டம் நின்றுவிடாது எனவும் உறுதியாக தெரிவித்திருக்கின்றார். இந்த நிலையிலே, தன்னுடைய ஆதரவாளர்கள் அனைவரும் 3ஆம் தேதி அதாவது நாளை தவறாமல் மதுரையில் இருக்கின்ற தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று கொள்ள வேண்டும் என அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

அதில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அழகிரி சார்பாக அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அவருடைய நெருங்கிய ஆதரவாளர்கள் மூலமாக தகவல்கள் கிடைத்திருக்கின்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் குறைந்தபட்சம் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கூட்டத்திற்கு பிறகு அளவில் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு திமுகவின் தொண்டர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது

Previous articleஉதயநிதி ஸ்டாலினை வம்புக்கு இழுத்த குஷ்பு!
Next articleமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் கேப்டன் கங்குலி! என்ன நடந்தது?