திருமணம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை அஞ்சலி!

0
183

அங்காடித்தெரு திரைப்படத்தின் மூலமாக நடித்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர் நடிகை அஞ்சலி அந்த திரைப்படத்தில் அவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளியிட்டதன் மூலமாக இந்த திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு முன்பு அவர் பல திரைப் படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது

இருந்தாலும் அண்மைக்காலமாக அவருக்கு எந்தவிதமான பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் நான் காதலித்தது உண்மைதான். ஆனாலும் என்னுடைய காதல் கைகூடவில்லை என்று தெரிவித்திருந்தார். ஆனாலும் அவர் தன்னுடைய காதலர் யார் என்பது தொடர்பாக எந்தவிதமான தகவலையும் வெளியிடவில்லை என்று சொல்லப்படுகிறது

இந்த சூழ்நிலையில், அஞ்சலிக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும், தகவல் கிடைத்தது இந்த சூழ்நிலையில், தற்சமயம் நடிகை அஞ்சலிக்கு திருமணம் என்ற தகவல் வெளியாகி இருந்தது. இந்த விவகாரத்தில் அவர் நான் திரைப்பயணத்தில் கவனம் செலுத்தி வருகின்றேன் திருமணம் தொடர்பாக தற்போது எனக்கு எந்தவிதமான யோசனையும் இல்லை. நல்ல கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிவித்து அவர் தொடர்பாக வெளியான திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

Previous articleபிறந்த 14 நாட்களே ஆன குழந்தைக்கு செவிலியர் செய்த கொடுமை! தஞ்சையில் நடந்த அவலம்!
Next articleஇனிமே இதற்கு கட்டணங்கள் இல்லை! முதல்வர் அறிவிப்பு!