நாமக்கல் ஆஞ்சநேயருக்கு கார்த்திகை, மார்கழி, தை, உள்ளிட்ட மாதங்களில் வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்து வருகிறார்கள். இந்த வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்வதற்கு 3 மணி நேரமாகும் என்கிறார்கள்.
ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்வது எதற்காக என்பது தொடர்பான வரலாறு இருக்கிறது. ராவணன் சம்காரத்திற்கு பிறகு தேவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்த 2 அசுரர்களை ஒழிப்பதற்காக ஆஞ்சநேயரை தேவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.
ஆகவே ஆஞ்சநேயருக்கு இந்த போரில் உதவி புரிய ராமர் வில்லையும், பிரம்மா ,சிவன், உள்ளிட்ட மாற்ற தெய்வங்கள் அவரவர்களுக்கு உரிய ஆயுதங்களையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.
அதேபோல கண்ணன் வெண்ணெய் வழங்கி இந்த வெண்ணெய் உருகுவதற்கு முன் உன்னுடைய காரியம் வெற்றியடையும் எனவும், அசுரர்களையும், அழித்து விடலாம் எனவும் தெரிவித்து வாழ்த்தினார் என சொல்லப்படுகிறது.
அதனடிப்படையில். ஆஞ்சநேயர் கையில் ஆசிர்வாதமாக வழங்கப்பட்ட வெண்ணெய் உருகுவதற்குள் 2 அசுரர்களையும் போரில் சந்தித்து ஆஞ்சநேயர் அவர்களை அழித்துக் காட்டினார்.
அதேபோல ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபட்டால் நாம் சாத்திய வெண்ணெய் உருகுவதற்கு முன் காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகமாக இருக்கிறது.