இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசனை செய்து வருகிறது.
கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் திறக்காததால் 10 மற்றும் 11-ம் வகுப்பு இறுதியாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டனர். மேலும் கலை கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து யுஜிசி பரிந்துரை செய்துள்ளது.
மேலும் பொறியியல் கல்லூரிகளில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு தேர்வுகள் நடத்துவது குறித்து பேசப்படாத நிலையில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இறுதி ஆண்டு மாணவர்கள் அடுத்த ஆண்டு வேலைக்கு செல்ல இருப்பதால் தேர்வுகள் அவசியம். எனவே மாணவர்கள் வீட்டிலிருந்து செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் எழுதுவது குறித்து பல்கலைக்கழகம் ஆலோசித்து வருகிறது.