அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரம்.. நீதிமன்றம் அளித்த பரபர தீர்ப்பு!!

Photo of author

By Madhu

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரம்.. நீதிமன்றம் அளித்த பரபர தீர்ப்பு!!

Madhu

anna-university-student-sexual-assault-case-verdict-on-june-2nd

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். சென்னை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம் ராஜலட்சுமி தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளார். அந்த தீர்ப்பில் ஜூன் இரண்டாம் தேதி அறிவிக்கப்படும் என முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த வழக்கில் ஞானசேகரன் மீது 11 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

அந்த குற்றச்சாட்டு நிரூபணம் ஆகியுள்ளதாக நீதிபதி அறிவித்துள்ள நிலையில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கி இருக்கின்றார். இந்த வழக்கில் ஐந்து மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தண்டனை விவரம் குறித்து ஞானசேகரன் நீதிபதியிடம், தனக்கு வயதான தாய் இருப்பதாகவும், தன்னுடைய தொழிலுக்கு நஷ்டம் ஏற்படும் அதனால் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அரசு தரப்பில் ஞானசேகரனுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரி வழக்கு விசாரிக்கப்பட்டது உயர்நீதிமன்றம் இது தொடர்பாக பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தனர் . ஞானசேகரனுக்கு தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் ஜனவரி 5ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.மேலும் பிப்ரவரி 24ஆம் தேதி சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை போலீசார் சுமத்தியுள்ளார் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என தொடர்ந்து ஞானசேகரன் கோரிக்கை வைத்து வந்தார். இந்நிலையில் குற்றவாளி மீது 35 வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில் பல வழக்குகளில் தண்டனையும் சில வழக்குகளில் விடுதலையும் பெற்றுள்ள ஞானசேகரனுக்கு 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும்  குறிப்பிடத்தக்கது.