அந்தர் பல்டி அடிக்கும் அண்ணாமலை! வெளுத்து வாங்கிய அதிமுக!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தொழில்துறை அமைச்சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். அவருடைய மறைவுக்குப் பின்னர் கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக, அதிமுகவிலிருந்து விலகி அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் நயினார் நாகேந்திரன். பாஜக மாநில துணை தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது, தொடர்ந்து அவர் திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் பாஜக சார்பாக நின்று வெற்றி அடைந்தார்.

இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தஞ்சை பள்ளி மாணவியின் இறப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜகவை சார்ந்தவர்கள் பங்கேற்று கொண்டார்கள். இந்த போராட்டத்தில் உரையாற்றிய நயினார் நாகேந்திரன் சட்டசபையில் அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்று தெரிவித்தார், அதோடு சட்டசபையில் அதிமுக ஒரு ஆண்மையுள்ள எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்று தெரிவித்தது சர்ச்சையை எழுப்பியது.

அதேபோல பாஜகதான் எதிர்க்கட்சியாக செயல்படுகிறது என்றும் எந்த விவரத்தையும் துணிச்சலாக சொல்லும் தைரியம் பாஜகவிற்கு மட்டுமே உள்ளதாகவும் அதிமுகவில் துணிச்சலாக பேசுவதற்கு யாருக்கும் தைரியமில்லை என்றும் அவர் உரையாற்றியிருந்தார், இதனையடுத்து நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சால் அதிமுகவினர் கடுமையான கோபத்திற்கு ஆளானார்கள்.

அதிமுகவின் சட்டசபை உறுப்பினர் அருள்மொழித்தேவன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பத்திரிக்கையாளர்களிடம் இது தொடர்பாக பேட்டியளித்தார்கள். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது, பாஜகவின் சட்டசபை உறுப்பினரின் இந்த கருத்து தங்களை மிகவும் அதிர்ச்சியடைய வைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

ஆகவே இனிமேலும் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி தொடருமா? என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்றும், தெரிவித்திருந்தார்கள். இதனைத்தொடர்ந்து நயினார் நாகேந்திரன் பேச்சு பாஜகவின் கருத்து அல்ல, அது நயினார் நாகேந்திரனின் தனிப்பட்ட கருத்து என்று பாஜக மன்னிப்புகேட்டு இருப்பதாகவும், சொல்லப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை சட்டசபை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உரையாற்றும்போது கைதட்டி ஆரவாரம் செய்து விட்டு தற்சமயம் மன்னிப்பு கேட்பது போல் நாடகமாடுவதாகவும் , வெளிவேஷம் போடுவதாகவும், முன்னாள் அமைச்சர்கள் பலர் தெரிவித்து வருகிறார்கள். ஆனாலும் அண்ணாமலையின் இதுபோன்ற நடிப்பு வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டது குறித்து அதிமுகவின் மேலிடம் எந்த மாதிரியான முடிவை எடுக்கப்போகிறது என்பது தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.