மிசா சட்டத்தை காரணம் காட்டி கைது செய்த கட்சி தலைவரையே தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட வைத்த முதலமைச்சர்!

Photo of author

By Sakthi

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர் தொடர்பாக எழுதியிருக்கின்ற சுயசரிதை புத்தகம் நேற்று வெளியானது. அவருடைய வாழ்க்கை நிகழ்வு தொடர்பான புத்தகம் வெளியிடப்பட்டது.

இந்த விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்றைய தினம் நடந்தது இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி பங்கேற்று கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

இந்த சூழ்நிலையில், ஸ்டாலின் சுயசரிதை புத்தகத்தை ராகுல்காந்தி வெளியிட்டதை பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள் எமர்ஜென்சி சமயத்தில் தான் கைது செய்யப்பட்டதை தமிழ்நாட்டினுடைய இருண்டகாலம் என்று தெரிவித்திருக்கிறார் என தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.

மேலும் அவர் தெரிவித்ததாவது, இந்திரா காந்தி தான் இதனை செய்தார் அவருடைய பேரன் ராகுல் காந்தி பெருமையுடன் புத்தகத்தை இன்று வெளியிட்டிருக்கிறார். காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி போல எத்தனை முரண்பாடுகள் இவர்களுடைய செய்திகளில் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க கோபாலபுரம் இல்லம் போன்ற வடிவமைப்பைக் கொண்ட வீட்டிலிருந்து புத்தகத்தை எடுத்து ராகுல்காந்தி வெளியிட்ட சமயத்தில் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அந்த நூலைப் பெற்றுக் கொண்டார். இந்த சுயசரிதை நூலில் ஸ்டாலின் அவருடைய பள்ளிப் பருவம் மற்றும் கல்லூரி பருவங்கள், இளமைப்பருவம் ஆரம்ப நிலை, அரசியல் பங்களிப்பு, திருமண வாழ்க்கை, போராட்டம் என்று 1976-ம் வருடம் வரையில் இருக்கின்ற 23 வருட கால நினைவுகளை பதிவு செய்திருக்கிறார். பூம்புகார் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் இந்த சுயசரிதை புத்தகத்தில் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு தான் எழுதப்பட்டிருக்கிறது என்று சொன்னால் நிச்சயமாக அதில் பல வரிகள் காங்கிரஸ் கட்சியைப் பற்றி தான் இருக்க வேண்டும். ஏனென்றால் எமர்ஜென்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் பிரதமர் இந்திரா காந்தி இந்தியாவில் உள்ள அனைத்து மாநில கட்சிகளையும் தடை செய்து மிசா சட்டத்தில் ஸ்டாலினை கைது செய்தார் .அப்போது ஸ்டாலின் படாத துன்பங்களில்லை என்று எத்தனையோ முறை, எத்தனையோ மேடையில், உரையாற்றியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இப்படி காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்து சுயசரிதை என்ற பெயரில் வெளியிடப்படும் இந்தப் புத்தகத்தை அதே காங்கிரஸ் கட்சியை சார்ந்த ஒரு முக்கிய தலைவர் வெளியிடுவது வேடிக்கையாக இருக்கிறது என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.1970களில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய பலத்துடன் இருந்த காலகட்டத்தில் தமிழகத்தில் திமுகதான் அதன் முதல் எதிரி.

அதன் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக, அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை நிரந்தர நண்பனுமில்லை என்ற கூற்றை முன்வைத்து பரம்பரை எதிரியாக இருந்து வந்த இந்த இரு கட்சிகளும் கூட்டணியில் இணைந்தனர்.கடந்த 2004ஆம் வருடம் ஏற்பட்ட இந்த கூட்டணியானது தற்போது வரையில் நீடித்து வருகிறது.

ஆனால் இந்த இரு கூட்டணிகளின் அரசு மத்தியிலும், மாநிலத்திலும், நடைபெற்றபோது தான் இலங்கைத் தமிழர் படுகொலை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் அப்போது மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த திமுக இலங்கையில் நடைபெற்ற ஈழத்தமிழர்கள் படுகொலை தொடர்பாக பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

மாறாக தன்னுடைய உறவினர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கேட்டு வாரம் ஒருமுறை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி டெல்லிக்குச் சென்று வந்தார்.இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். ஆனால் அதிகாரம் தன்வசம் இருக்கிறது என்ற காரணத்தால், எதிர்க்கட்சிகளின் குரல் திமுகவின் காதுகளில் விழாமல் போய்விட்டது.

இது ஒருபுறமிருக்க காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் தண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததால் ஈழத் தமிழர்கள் படுகொலையில் காங்கிரஸ் கட்சியும் பெரிதாக அக்கறை செலுத்தவில்லை.

ஆனாலும் பிற்காலத்தில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதப் போராட்டம் இருந்தார். இருந்தாலும் இந்த போராட்டமானது ஒரு கண் துடைப்பாகவே பார்க்கப்பட்டது.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு என்பதை போல ஈழத்தமிழர்கள் படாத துன்பங்களையெல்லாம் அனுபவித்த பின்னர் தற்போது ஈழத் தமிழர்களுக்காக எதையும் செய்வோம் என்று முதலமைச்சர் தெரிவித்து வருவது வேடிக்கையாகயிருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகிறார்கள்.