DMDK BJP: பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி அடுத்த கட்டமாக தமிழக சட்டமன்ற தேர்தலை நோக்கி திரும்பியுள்ளது. பாஜகவிற்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லாத காரணத்தினால், அது அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருக்கிறது. அதிமுக, பாஜக உடன் கூட்டணி அமைப்பதற்கு முன்பு ஒரு சில நிபந்தனைகளை முன்வைத்தது. அதில் ஒன்று தான் இபிஎஸ்க்கு எதிராக இருந்த அண்ணாமலை பதவியை பறிக்க வேண்டும் என்பது. அதன் அடிப்படையில் அண்ணாமலையின் பதவி பறிக்கப்பட்டு, தேசிய அளவில் அவருக்கு பொறுப்பு வழங்கப்படுவதாக பேச்சுக்கள் எழுந்தது.
ஆனால் தற்போது வரை அதற்கான நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் அண்ணாமலை பாஜக விவகாரங்களிலிருந்து சற்று ஒதுங்கியே இருந்தார். இவ்வாறான நிலையில் 23 ஆம் தேதி தமிழக வந்த பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், இபிஎஸ்யிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் தேமுதிகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக தகவல் வந்தது. இதனை அறவே மறுத்த பிரேமலதா, இந்த செய்தியை வெளியிட்ட கட்சிக்கும், ஆலோசனையில் ஈடுபட்ட கட்சிக்கும் அழிவு காலம் வந்து விட்டது என்று கூறியிருந்தார். இவர் இவ்வாறு கூறியது, பாஜக, அதிமுகவை தான் என்பது வெளிப்படையாக தெரிகிறது.
இந்த சமயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் பிரேமலதாவின் கருத்து குறித்து கேட்ட போது, இந்த புகாருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. இதை யாரிடம் சொன்னார்களோ அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறி அங்கிருந்து சென்று விட்டார். பிரேமலதா பாஜகவை தான் கூறியுள்ளார் என்பது வெளிப்படையாக தெரிந்தும் கூட அண்ணாமலை அதற்கு மாறாக எந்த கருத்தும் கூறாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அண்ணாமலை பாஜக மேல் அதிருப்தியில் உள்ளார் என்பது நிரூபணமாகியுள்ளது.