நடப்பாண்டின் 75வது குடியரசு தினவிழாவில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்திகளை அனுமதி மறுக்கப்பட்டது, தென்மாநிலங்களில் கர்நாடகா தவிர வேறு எந்த மாநிலங்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தலையிட்டு அனுமதி வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்த சூழ்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஒரு வீடியோ பதிவில் 2019 மற்றும் 2020 -2021 உள்ளிட்ட கடந்த 3 வருடங்களாக தமிழக அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
மகாபலிபுரம் சிற்பக்கலை, அய்யனார், மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழா உள்ளிட்டவற்றை அலங்கார ஊர்திகள் மூலமாக இந்த உலகிற்கு காட்டும் 2017 மற்றும் 16 உள்ளிட்ட வருடங்களில் தமிழ்நாட்டிற்கு இடம் கிடைத்தது. அப்படிப் பார்த்தோமானால் மோடி அரசு வந்த பிறகு சுமார் ஐந்து வருடங்களாக நமக்கு அனுமதி கிடைத்திருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.
வேறு எந்த மாநிலங்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது குறிப்பாக கேரள மாநிலத்திற்கு இரண்டு முறைதான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு தான் அலங்கார ஊர்திகளை தேர்வு செய்யும், பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் எல்லா வருடங்களிலும் அனைத்து மாநிலங்களுக்கும் அனுமதி வழங்கப்படாது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தச் சூழ்நிலையில், பாதுகாப்பு துறை தமிழக தலைமைச் செயலாளருக்கு குடியரசு தினவிழா அணிவகுப்பு கருத்தாக்கம் தொடர்பாக கடிதம் எழுதி இருந்தது. 75 ஆண்டுகள் நாம் சுதந்திரம் பெற்று ஒரு நாடாக வளர்ந்து விட்டோம் இந்த கருத்தரங்கில் மாநிலத்தின் ஊர்தி இருக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தமிழ் நாடும் தன்னுடைய கருத்தாக்கத்தை வழங்கியிருந்தது அதன் அடிப்படையில் வல்லுநர் குழு ஆய்வு செய்து முடிவு செய்திருக்கிறது. தமிழ்நாடு கொடுத்த கருத்தாக்கத்திற்கு பின் இந்த வாய்ப்பு நமக்கு கிடைக்கவில்லை.
இது வருத்தத்திற்குரிய விஷயம் ஆனாலும் இதனை தவிர்த்து வேலுநாச்சியார் வா. உ .சி பாரதியாருக்கு மரியாதை வழங்கப்படவில்லை என்பதெல்லாம் இல்லை என்று நாச்சியாருக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆகவே பொய்யான அரசியல் வலையில் விழுந்துவிட வேண்டாம் என்று கூறியிருக்கிறார் அண்ணாமலை.