முதல்வர் வேட்பாளராகும் அண்ணாமலை.. அமித்ஷா போட்ட ஸ்கெட்ச்!! விரக்தியில் இபிஎஸ்!!

0
565
Annamalai is the Chief Minister's candidate.. Amit Shah's sketch!! EPS in desperation!!
Annamalai is the Chief Minister's candidate.. Amit Shah's sketch!! EPS in desperation!!

ADMK BJP: பீகாரில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக, தமிழக தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறது. பாஜகவின் கொள்கையே அதற்கு எதிரியாக அமைந்தது விட்டது. அதன் இந்துத்துவ வாத கொள்கையை தமிழக மக்கள் ஏற்காததால் பாஜக தமிழகத்தில் வெற்றி பெற முடியாமல் தவிக்கிறது. இதனால் பாஜக, அதிமுக உடன் கூட்டணி அமைத்து வெற்றி வியூகங்களை வகுத்து வருகிறது. ஆனால் அதிமுகவின் நிலையை பார்த்தால் 2026 தேர்தலில் எதிர் கட்சியாக கூட வர முடியாத அளவிற்கு உள்ளது. அந்த அளவிற்கு அதிமுக பிளவு ஏற்பட்டு, பலரும் கட்சி மாறி இணைந்து வருவதுடன், புதிய கட்சி துவங்கும் எண்ணத்தில் உள்ளனர்.

இவை அனைத்தும் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை வெறியால் தான் நிகழ்கிறது என பாஜக நினைக்கிறது. இதனால் இபிஎஸ்யின் தலைமைக்கு எதிராக உள்ளவர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து வருவதை பார்க்க முடிகிறது. முதலில் இரு தினங்களுக்கு முன்பு ஓபிஎஸ் அமித்ஷாவை சந்தித்து பேசிய நிலையில், தற்போது புதிதாக பாஜகவின் முன்னாள் மாநில தலைவராக இருந்த அண்ணாமலை திடீர் பயணமாக டெல்லி சென்றிருக்கிறார். இது பேசுபொருளான நிலையில், அண்ணாமலை-அமித்ஷா குறித்த விவாதங்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் இவர்களின் பேச்சு வார்த்தை என்ன என்பது பற்றிய தகவல் கசிந்துள்ளது. அதிமுகவின் தலைமையால் பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வருவதால், முதல்வர் வேட்பாளராக அண்ணாமலையை நிறுத்த பாஜக திட்டமிட்டிருப்பதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன், சசிகலா என அதிமுகவின் முக்கிய தலைகள் அண்ணாமலைக்கு ஆதரவாக இருப்பதாலும், இபிஎஸ்யால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அண்ணாமலைக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று கூறியதாலும் அமித்ஷா இந்த முடிவை எடுத்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

Previous articleசீமானும் விஜய்யும் பாஜகவின் பி டீம்.. மவுசு குறைந்த நாதக!! ஓப்பனாக பேசிய விசிகவின் டாப் தலை!!
Next articleSIR குறித்து குவியும் குற்றச்சாட்டுகள்.. வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதாக அதுகாரிகள் வலியுறுத்தல்!!