AMMK BJP: பாஜகவின் முக்கிய முகமாக திகழ்ந்த அண்ணாமலை தற்போது பாஜகவிலிருந்து விலகி புதிய பாதையை அமைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அவர் ரஜினியிடம் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் அண்ணாமலைக்கும், எனக்கும் நல்ல உறவு இருக்கிறது என்றும், நாங்கள் தினமும் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம் என்றும் கூறியிருந்தார்.
இதனால் அமமுக கட்சியில் அண்ணாமலை இணைவார், அல்லது இவர்கள் இருவரும் பாஜக கூட்டணியில் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அண்ணாமலை தொடர்பாக வெளிவந்த செய்தி அதனை உறுதி செய்யும் வகையில் உள்ளதாகவும் பேசப்படுகிறது. மற்றொரு புறம் அண்ணாமலை புதிதாக கட்சி தொடங்குவார் என்றும், இந்த கட்சிக்கு தினகரனின் ஆதரவு கிடைக்கும் என்றும் வியூகங்கள் எழுந்துள்ளது.
பாஜக தமிழகத்தில் காலூன்ற வேண்டுமென போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில் பாஜகவின் முக்கிய முகமாக அறியப்படும், அண்ணாமலை விலகி தினகரனுடன் கூட்டணி வைத்தால் அது பாஜகவின் வளர்ச்சியை தடுக்கும். இது பாஜகவிற்கு மட்டுமல்லாமல் அதிமுகவிற்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். டிடிவி தினகரன் முன்னாள் அதிமுக வாக்காளர்களிடம் இன்னும் ஒரு அளவிற்கு செல்வாக்கு வைத்துள்ளார்.
அதேபோல அண்ணாமலை இளைஞர்களிடையே ஒரு தனி ஆதரவை பெற்றிருக்கிறார். இருவரும் இணைந்தால், அதிமுகவின் பாரம்பரிய வாக்கு சிதறக்கூடும். டிடிவி தினகரன் இபிஎஸ் மேல் அதிருப்தியில் இருப்பதாலும், அண்ணாமலை பாஜகவின் மேல் அதிருப்தியில் இருப்பதாலும், இவர்கள் இருவரும் இணைந்து அதிமுக-பாஜக கூட்டணியை சிதைக்க திட்டம் தீட்டுகிறார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.