ஓஹோ இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? திமுகவை செமையாக கலாய்த்த அண்ணாமலை

Photo of author

By Sakthi

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள புஷ்பத்தூர் ஊராட்சி வயலூரில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றதாக தெரிகிறது. இதில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது திமுகவின் தேர்தல் வாக்குறுதி தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பக் கூடாது, ஏனென்றால் தேர்தல் வாக்குறுதிகளை எழுதியவர் டி ஆர் பாலு தான் என்று ஆர் எஸ் பாரதி தெரிவிக்கிறார்.

அப்படியென்றால் டி.ஆர்.பாலுவை முதல்வராக்கி விடுங்கள் தமிழகத்தில் எது நடந்தாலும் திராவிட மாடல் ஆட்சி என ஸ்டிக்கர் ஒட்டி வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

வயலில் சிவப்பு கம்பளம் விரித்து கஞ்சி போட்ட வேஷ்டி சட்டையுடன் விவசாயம் செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சியின் ஏமாற்றுவேலை என அவர் கூறியிருக்கிறார்.

நாட்டில் அதிக பொய் பேசுவதில் முதலிடத்தில் இருக்கின்ற முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார். தமிழக அமைச்சர்களின் ஊழல் தொடர்பான புள்ளிவிபரங்களை வெளியிடுவதாக நான் கூறினேன். ஒரு சில அமைச்சர்கள் தற்போது என்னிடம் தூது விடுகிறார்கள் என்று கூறியிருக்கிறார் அண்ணாமலை.

அனைத்து முடிவுகளும் கோபாலபுரத்தில் இருந்துதான் முடுக்கி விடப்படுகிறது எங்களுக்கும், அதற்கும், எந்தவிதமான சம்பந்தமுமில்லை என்று தெரிவிக்கிறார்கள்.

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அமெரிக்காவில் 2 வங்கிகளை திவால் செய்துவிட்டு வருகை தந்தவர் என கூறியிருக்கிறார்.

பிரதமர் நரேந்திரமோடி 8 வருடங்களில் காஷ்மீர் பிரச்சனை முதல் உள்நாட்டு நக்சலைட் பிரச்சனை வரை அனைத்திலும் தலையிட்டு அந்தப் பிரச்சினைகளை குறைத்திருக்கிறார்.

ஆனால் தமிழகத்தில் முன்னாள் பிரதமரை கொலை செய்த குற்றவாளியை தமிழக முதலமைச்சர் கட்டித் தழுவுகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார் அண்ணாமலை.

தலைநகர் சென்னையில் பட்டப்பகலில் முகத்தை மறைக்காமல் கூலிப்படையினர் கொலை செய்கிறார்கள். திமுக ஆட்சியில் ரவுடிகள் தைரியமாக நடமாடி வருகிறார்கள்.

திமுக ஆட்சியின் 2வது வருட ஆரம்பத்தில் மகன், மருமகள் உள்ளிட்டோரை தொடர்ந்து 3வது அதிகார மையமாக துர்கா ஸ்டாலின் உருவெடுத்து வருகிறார்.

உதயநிதி ஸ்டாலினை அமைச்சர்களும், சட்டசபை உறுப்பினர்களும், புகழ்ந்து பேசுவது இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைபடத்தில் வடிவேலுவை மந்திரிகள் புகழ்ந்து பேசுவதை போல இருக்கிறது.

உக்ரைனிலிருந்து தமிழக அரசு மாணவர்களை மீட்பதற்கு சுவட்டர் கம்பெனிக்கு ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்ததாக கூறியது. அதேபோல டிராவல் ஏஜென்சி கம்பெனிக்கும் பணம் கொடுத்ததாக தெரிவித்திருக்கிறது.

காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து கச்சத்தீவை தாரைவார்த்த தூரம் மீன்பிடி உரிமையையும் ரத்து செய்தனர். தற்போது கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை முழுவதையும் மத்திய அரசு கொடுத்துவிட்டது. ஆகவே தற்போது மாநில அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.