இதுதான் திராவிட மாடல் வளர்ச்சியா? திமுகவை விளாசிய அண்ணாமலை!

Photo of author

By Sakthi

ஆரம்பத்திலிருந்தே தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுகவை நீர்த்துப்போகச் செய்வதில் பாஜக மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறது.அதனை மனதில் வைத்து தான் தமிழகத்தில் திராவிட கட்சிகளை வேரறுப்போம் என்ற முழக்கத்தை பாஜக தொடங்கியது.

இது ஒருபுறமிருக்க மறுபுறம் மதவாத கட்சியை வேரறுப்போம் என்று திமுக பாஜகவிற்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.இவ்வாறு பரஸ்பரம் இரு கட்சிகளும் மாறி, மாறி, குற்றம் சுமத்திக் கொண்டு வருகிறார்கள்.

நதிநீர் பிரச்சினைகள் உள்ளிட்டவற்றை பற்றி திமுகவைச் சார்ந்தவர்களிடம் கேள்வி எழுப்பினால் எப்போதும் தமிழகத்தின் உரிமையை திமுக அரசு விட்டுக் கொடுக்காது என்று தெரிவித்து வருகிறார்கள்.

அது கேரளாவாக இருந்தாலும் சரி, கர்நாடகாவாக இருந்தாலும் சரி, எங்களின் நிலை இதுதான் என்று தெள்ளத்தெளிவாக தெரிவிக்கிறார்கள் திமுகவை சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில், கர்நாடகத்தில் மேகதாது என்ற பகுதியில் அணை கட்டுவதற்கு அந்த மாநில அரசு நிதி ஒதுக்கியிருக்கிறது இது தமிழக அரசியல்வாதிகளை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால் மத்தியில் ஆட்சியில் இருக்கக்கூடிய பாஜகதான் கர்நாடகத்திலும் ஆட்சியிலிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.. இதுதொடர்பாக இதுவரையில் எந்தவொரு தெளிவான முடிவையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. ஆனால் கர்நாடக ஆளும் தரப்பு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மும்முரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்தார்.அப்போது அவர் தெரிவித்ததாவது மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசின் நிலை தெளிவாக இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி மேகதாது அணை தொடர்பாக இதுவரையில் வாயை திறக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கும் விதமாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் தமிழ்நாட்டில் ஆட்சியிலிருக்கும் திமுக கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் போக்கை இதுவரையில் கண்டிக்கக் கூட இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து ஒரு வார்த்தை கூட பேசாத முதலமைச்சராக தமிழக முதலமைச்சர் மாறியிருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆகவே கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கும், தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கும், ரகசிய உடன்பாடிருக்கிறது அதனை திமுக ஆதரித்து வருகிறதா? என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் வேறு எந்த மாநிலத்துக்கும் கொடுக்காத திட்டங்களை தமிழகத்திற்கு கொடுத்திருக்கிறார் தமிழக அரசுக்கு தொலைநோக்கு திட்டம் கிடையாது எதுவுமே இல்லாமல் அவர்கள் கடைசியாக நம்பியிருப்பது மதுபான கடையை தான்.

மதுபானங்களின் விலை உயர்ந்தால் அரசுக்கு 2000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் இதனால் தலை தப்பிவிடும் என்று கொண்டாடி கொண்டுள்ளார்கள்.

டாஸ்மாக் மூலமாக கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அரசை நடத்தி விடலாம் என்று நம்பிக்கையுடன் இருந்து வருகிறார்கள் இதுதான் திராவிட மாடல் வளர்ச்சியா தமிழக முதலமைச்சர் பொய்யை மட்டுமே தெரிவித்துக் கொண்டுள்ளார் ஆட்சியை ஒட்டிக்கொண்டு உள்ளார் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.