அரசின் உத்தரவால்! வருத்தத்திற்க்கு உள்ளான அந்த நபர்!

Photo of author

By Sakthi

அரசின் உத்தரவால்! வருத்தத்திற்க்கு உள்ளான அந்த நபர்!

Sakthi

Updated on:

கரூர் மாவட்டத்தில் தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் தெரிவித்ததாவது.

வேல் யாத்திரைக்கு கடைசி சமயத்தில் அரசு அனுமதி பெறுவதற்கு மறுத்திருப்பது மிகவும் வருத்தம் தருகின்றது. வேல் யாத்திரைக்கு பல மாவட்டங்களில், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அனுமதி வழங்கி இருக்கிறார்கள்.

ஆனாலும் தமிழக அரசு திடீரென தடை விதித்திருக்கிறது. கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் போது தான் திமுக உள்பட பல கட்சிகளின் நிகழ்வுகள் நடந்துள்ளன.மதக்கலவரம் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

பாஜகவின் பாடலில் எம்ஜிஆர் அவர்களின் புகைப்படத்தை பயன்படுத்துவதற்கான காரணம், அவர் சிவன் மற்றும் முருகனுடைய பக்தர் என்பதால் தான்.எனவே இதில் வேறு எந்த அரசியல் நோக்கமும் இல்லை.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு இடத்திலும் நாங்கள் தடையை மீறி தான் வளர்ந்து கொண்டிருக்கின்றோம் என்று அண்ணாமலை தெரிவித்திருக்கின்றார்.