BJP : பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பால் பண்ணை தொடங்க போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக இவர் தனது அறிக்கையில் பாஜக என்று குறிப்பிடாமல் “Ex IPS” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு இவர் அரசியலில் இருந்து முழுமையாக வெளியேற போகிறாரா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இதற்கு முன் பாஜக-வில் இருந்து வெளியேறிய கே.நாராயணராவ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார், அதே போல் பாஜக-வின் தேசிய தலைவராக இருந்த ஜன கிருஷ்ணமூர்த்தி தற்போது சட்ட ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இவர்கள் வரிசையில் அண்ணாமலையும் இடம் பெற போவதை போல அவரின் அறிவிப்பு உள்ளது.
அரசியலுக்கு வருவதற்கு முன்னரே தன்னுடைய சொந்த முயற்சியில் பால் பண்ணையை ஆரம்பித்தார். அதேபோல், சில முதலீட்டு நிறுவனங்களிலும் பங்குகளை வைத்துள்ளார். இதன் மூலம் வரும் வருமானம் தான் தன்னுடைய குடும்ப செலவுகளுக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் உதவியாக இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.
நான் அரசியலில் இருக்கிறேன் என்பதற்காகவே யாரிடமும் பணம் கேட்பதில்லை, என்னுடைய உழைப்பின் மூலம் தான் வாழ்க்கையை நடத்துகிறேன் என்று கூறியுள்ளார். இயற்கை விவசாயத்தின் மீது நான் கொண்ட ஆர்வத்தினால் எங்கள் “we the leaders” என்ற அறக்கட்டளையின் மூலம் இயற்கை விவசாயம் தொடர்பாக பல ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் நமது இளைஞர்களின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், விரைவில் மற்றொரு முதலீட்டு நிறுவனத்தையும் தொடங்குவேன் அதற்கு அடித்தளமாக இது அமையும் என்றும் கூறியுள்ளார். “அரசியலை வியாபாரம் ஆக்கவில்லை” என்ற கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக இந்த விளக்கத்தை அளித்துள்ளார் என்றும் சிலர் கூறுகின்றனர்.