இலவச வேஷ்டி சேலை திட்டத்தை கைவிடுவதற்கு திமுக அரசு திட்டமிட்டிருக்கிறது என்று தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் இசைத்தறி உரிமையாளர்களுக்கு 1000 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவோம் என்று தெரிவித்துவிட்டு அதனை செயல்படுத்தாமல் மின்கட்டணத்தை ஒரு யூனிட்டு இருக்கு 20 காசு என அதிகரித்திருக்கிறது திமுக அரசு.
ஆட்சிக்கு வந்த நாள் முதல் நெசவு தொழிலாளர்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது திமுக அரசு என தெரிவித்துள்ளார் அண்ணாமலை.
திருப்பூர், கோயம்புத்தூர், உள்ளிட்ட நகரங்களிலிருக்கும் விசைத்தறி உரிமையாளர்கள் 59 நாட்கள் வேலை நிறுத்த போராட்ட நடத்திய பிறகு தான் நெசவு கூலி உயர்த்தி வழங்கப்பட்டிருக்கிறது.
இலவச வேஷ்டி, சேலை, திட்டத்திற்கு மூடு விழா நடத்துவதற்கு திமுக அரசு திட்டமிட்டிருக்கிறது. 1.80 கோடி சேலைகள், வேஷ்டிகளை நெய்வதற்கு நூல் கொள்முதலுக்கு டென்டர்கள் வழங்காமல் இழுபறி நீடித்து வருகிறது என கூறியிருக்கிறார் அண்ணாமலை.
நூல் வழங்கிய பிறகு ஒட்டுமொத்த ஒப்பந்தத்தை முடித்துக் கொடுக்க குறைந்தது 5மாதங்களாகும் அதற்கு ஒரு சேலைக்கு 200 ரூபாயும், ஒரு வேஷ்டிக்கு 70 ரூபாயும், நெய்வதற்கு கூலியாக அரசு வழங்க வேண்டும்.
தற்போது டெண்டர் வழங்குவதில் தாமதமாகி வருவதால் நெசவாளர்களுக்கு 486 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உண்டாகியிருக்கிறது. இந்த டெண்டரை வழங்கவில்லையென்றால் பாஜக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.