
TVK: கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், திமுக அரசு தனி நபர் ஆணையம் அமைத்து விசாரித்து வருகிறது. இதன் மேல் நம்பிக்கை இல்லாத பாஜக அரசு பாஜக எம்.பி ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரித்து வருகிறது. இந்த குழுவின் அடிப்படை நோக்கம் திமுக அரசின் சதியை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டுமென்பதே என்றும் கூறப்பட்டு வருகிறது.
மேலும் இந்த குழு திமுக சதியை கண்டறிந்து விட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த குழு சம்பவம் நடந்த இடத்திற்கே சென்று, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விசாரித்து வருகிறது. அப்போது அவர்களுடன் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் உடனிருந்து சம்பவத்தை விளக்கி கூறி வருகிறார். இதனை தொடர்ந்து அண்ணாமலை எங்கு சென்றாலும் கரூர் சம்பவத்தை பற்றியே செய்தியாளர்கள் கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஒட்டன்சத்திரம் மற்றும் கரூர் செல்வதற்காக சென்னையிலிருந்து இன்று மதியம் விமானம் மூலம் மதுரை வந்த அண்ணாமலையிடம் கரூர் சம்பவம் குறித்தும், நீதிமன்ற விசாராணை மற்றும் பாஜக குழு பற்றியும் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, இதை பற்றி தவெக தலைவர் விஜய்யிடம் கேளுங்கள், கரூர் சம்பவத்தை பற்றி அவரை தவிர அனைவரும் பேசுகிறிர்கள்.
நான் என்ன தவெகவிற்கு மார்க்கெட்டிங் ஆபீஸரா?. எங்களிடம் கேட்கும் கேள்வியை நீங்கள் தவெகவினரிடம் கேட்க வேண்டும். ஏன் எல்லா இடங்களிலும் நொச்சி நொச்சினு இதே கேள்விகளை கேட்கிறீர்கள். எங்களை விரட்டி விரட்டி இது குறித்த கேள்வி கேட்பது நியாயமா? என்று கூறி விட்டு அவசர அவசரமாக காரில் ஏறி புறப்பட்டார்.