அண்ணாமலை அப்படியெல்லாம் செய்ய மாட்டார்.. சூசகமாக கூறிய நயினார் நாகேந்திரன்!!

0
64
Annamalai will not do such things.. Nayanar Nagendran hinted!!
Annamalai will not do such things.. Nayanar Nagendran hinted!!

BJP: பீகார் சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக தமிழக சட்டமன்ற தேர்தலில் கவனத்தை திருப்பியுள்ளது. பாஜகவின் இந்துத்துவ வாத கொள்கையை தமிழக மக்கள் எதிர்ப்பதால் அதனால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. இதற்காக பாஜக பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்தும் அது தோல்வியிலேயே முடிந்தது. இந்நிலையில் பீகாரில் பெற்ற வெற்றியை மையப்படுத்தி, தமிழகத்தில் வெற்றி பெற வேண்டும் என பாஜக முயற்சித்து வருகிறது. தமிழ்நாட்டில் மிகப்பெரிய திராவிடக் கட்சியாக அறியப்படும், அதிமுகவுடன் 1 வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து விட்டது.

தமிழக தேர்தலில் அதிமுக, திமுகவை விட அதிக கவனம் செலுத்தி வருவது பாஜக என்று கூறும் அளவிற்கு அதன் செயல்பாடுகள் உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் முன்னாள் பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றம் செய்யப்பட்டு நயினார் நாகேந்திரன் அமர்த்தப்பட்டார். இபிஎஸ்யின் நிபந்தனையால் பதவியை இழந்த அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்புகள் வழங்கப்படும் என்று பேசப்பட்டது.

ஆனால் அதற்குரிய வேலைப்பாடுகள் எதுவும் நடைபெறாத காரணத்தினால் அதிருப்தியடைந்த அண்ணாமலை புதிய கட்சி துவங்க போகிறார் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டது. இந்த செய்தி குறித்து அண்ணாமலை மறுப்பு தெரிவிக்காத காரணத்தினால், இது உண்மை என்றே பலரும் கூறினர். இந்நிலையில் இது குறித்து தற்போதைய மாநில தலைவர் நயினாரிடன் கேட்ட போது, அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க மாட்டார் என்று உறுதியளித்துள்ளார். இவரின் இந்த பதில், அண்ணாமலை மீண்டும் மாநில தலைவர் பதவியில் அமர்த்தபடலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அது மட்டுமல்லாமல், நயினார் இதற்கு முன் ஒரு முறை அரசியலில் எதுவும் நடக்கலாம், என் பதவி முடிவடையும் காலம் வந்து விட்டது என்று கூறியது இந்த வாதத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. மேலும் அண்ணாமலை தமிழகத்தில் நுழைந்த உடன் தான் பாஜகவின் வாக்கு சதவிகிதம் தமிழ்நாட்டில் அதிகரித்தது. அந்த காலகட்டத்தில் தான் பாஜக ஊடக வெளிச்சத்தில் தொடர்ந்திருந்தது. இதன் காரணமாக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அண்ணாமலை மீண்டும் பதவியில் அமரத்தப்படலாம் என்று கணிக்கப்படுகிறது.

Previous articleடெல்லிக்கு பறந்த முன்னாள் முதல்வர்.. குழப்பத்தில் இபிஎஸ்!! வாக்கை மீறிய பாஜக!!
Next articleடெல்லியை நாடிய பாமக நிறுவனர்.. செம்ம ஷாக்கில் அன்புமணி!! எண்டு கார்டு போடும் பாஜக!!