அரசியலில் புதிய திருப்பம்: தி.மு.க-விற்கு ஷிப்டாகும் அண்ணாமலை.. அபாய நிலையில் பாஜக!!

0
787
Annamalai will shift to DMK .. BJP's dangerous position .. New turn in politics
Annamalai will shift to DMK .. BJP's dangerous position .. New turn in politics

BJP DMK: தமிழக அரசியலில் எதிர்பாராத திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குறித்து பரபரப்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. அண்ணாமலை திடீரென தி.மு.க-வுக்கு நெருக்கம் காட்டும் வகையில் நடந்து கொள்வதாகவும், இது அமித்ஷா மற்றும் பாஜக தலைவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்ணாமலை தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த போது தொடர்ந்து தி.மு.க அரசை விமர்சித்து வந்தார், ஆனால் தற்போது தி.மு.க-விற்கு சாதகமாக அவரது கருத்துகள் உள்ளன என்று கூறப்படுகிறது. அதிமுக-வுடன் கூட்டணி வைத்துக் கொள்வதா இல்லையா என்ற விவகாரத்தில் அண்ணாமலை மற்றும் அமித்ஷா இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக சொல்லப்படுகிறது.

கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் கூட்டணிக்குள் நிலவும் பிளவுகள் மற்றும் அண்ணாமலையின் அரசியல் கனவுகள் ஆகியவை அவர் பா.ஜ.க-விலிருந்து விலகும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக பேசப்படுகிறது. ஏற்கனவே அ.தி.மு.க, பா.ம.க கட்சியில் ஏற்பட்ட பிளவுகளை சமாளிக்க முடியாத நிலைமையில் இருக்கும் பா.ஜ.க அரசு, அண்ணாமலையின் முடிவால் மேலும் சிக்கலில் சிக்க வாய்ப்பு உள்ளது.

அண்ணாமலையின் தி.மு.க-விற்கு சாதகமான கருத்துகள் தமிழக அரசியலில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. பா.ஜ.க-வின் முன்னாள் மாநில தலைவர் திடீரென திசை மாறுவது எதிர்கால அரசியலுக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும் என அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Previous articleஎடப்பாடிக்கு ஷாக்.. விஜய்யுடன் இணையும் அதிமுக கூட்டணி கட்சி!!
Next articleஅதிமுக வை கட்டுக்குள் கொண்டு வர பாஜக-வின் ரகசிய சதி திட்டம்!! தீவீரமடையும் கூட்டணி பிளவு!!