BJP TVK: முன்னாள் தமிழக பாஜக தலைவராக இருந்தவர் அண்ணாமலை. ஒரு வருடத்திற்கு முன்பு அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் போது இபிஎஸ், அண்ணாமலையை மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்ற நிபந்தனையை முன் வைத்ததன் அடிப்படையில் அண்ணாமலை பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு பிறகு பாஜக விவகாரங்களில் அண்ணாமலை அவ்வளவாக தலை காட்டாமல் இருந்தார்.
இதனால் இவர் பாஜகவிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டார் என்ற தகவலும் பரவியது. இதன் பிறகு இவருக்கு தேசிய அளவிலான பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் 1 ஆண்டுக்கு மேலாகியும் அதற்கான பேச்சு வார்த்தை எதுவும் நடைபெறாததால் வருத்தத்தில் இருந்த அண்ணாமலை அவரது ஆதரவாளர்களை வைத்து புதிய கட்சி தொடங்கப் போகிறார் என்ற செய்தியும் பரவி வருகிறது. மேலும் நயினாருடன் ஏற்பட்ட வாக்குவாதமும் இவர் கட்சி துவங்குவதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
இவரின் இந்த கட்சி கூடிய விரைவில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைய போகிறது என்றும் சொல்லப்படுகிறது. தவெக ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களே ஆன நிலையில், கரூர் சம்பவம் தவெகவிற்கு பூகம்பமாக வெடித்துள்ளது. இந்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், சிபிஐ பாஜக வசம் இருப்பதால் விஜய்யை கூட்டணிக்குள் இழுக்க பாஜக முயற்சித்து வருகிறது.
ஆனால் இதற்கு விஜய்யிக்கு விருப்பம் இல்லாதது போல் தெரிகிறது. இந்நிலையில், இதனை பயன்படுத்த கொண்ட அண்ணாமலை விஜய்யுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அதில் முதல் இரண்டரை வருடம் நீங்கள் முதலமைச்சராகவும், அடுத்த இரண்டரை வருடம் நான் முதலமைச்சராகவும் இருக்கிறேன் என்ற நிபந்தனையை விதித்திருக்கிறார்.
இதற்கு விஜய், அண்ணாமலைக்கு இருக்கும் இளைஞர்கள் பட்டாளமும், தவெகவிற்க்கு இருக்கும் இளைஞர் பட்டாளமும் ஒன்று சேர்ந்தால் சட்டமன்ற தேர்தலில் குறைந்தது 150க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து விடலாம் என்ற நினைத்து இதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் தவெக வட்டாரங்கள் கூறுகின்றன.