தம்பி இயக்கத்தில் நடிக்கும் அண்ணன்!! வெளியான சூப்பரான தகவல்!!

0
43

தம்பி இயக்கத்தில் நடிக்கும் அண்ணன்!! வெளியான சூப்பரான தகவல்!!

 

அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தம்பி தனுஷ் நடித்தது போல அடுத்து தம்பி தனுஷ் இயக்கும் திரைப்படத்தில் அண்ணன் செல்வராகவன் அவர்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் தனுஷ் அடுத்து இரண்டாவது முறையாக இயக்குநராக மாறியுள்ளார். அவர் நடிக்கப் போகும் 50வது திரைப்படமான டி50 திரைப்படத்தை நடிகர் தனுஷ் அவர்களே இயக்கி நடிக்கவுள்ளார்.

 

நடிகர் தனுஷ் நடிக்கும் 50வது திரைப்படத்திற்கு டி50 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த டி50 திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கலாநிதிமாறன் அவர்கள் தயாரிக்கின்றார். ஏஆர்.ரஹ்மான் அவர்கள் இசை அமைக்கவுள்ளார்.

 

டி50 திரைப்படத்திற்காக நடிகர் தனுஷ் அவர்கள் திருப்பதி சென்று மொட்டை அடித்து வெளியே வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த டி50 திரைபப்டத்தில் நடிகர்கள் எஸ்.ஜே சூரியா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இந்த திரைப்படம் ராயபுரத்தை சேர்ந்த ஒரு கேங்ஸ்டார் திரைப்படமாக உருவாகவுள்ளது. இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் அவர்கள் டி50 திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

இயக்குநர் செல்வராகவன்(அண்ணன்) இயக்கத்தில் நடிகர் தனுஷ்(தம்பி) புதுப்பேட்டை, மயக்கம் என்ன, நானே வருவேன், காலல் கொண்டேன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இயக்குநர் செல்வராகவன் அவர்கள் நானே வருவேன் திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். தற்பொழுது இயக்குநர் செல்வராகவன் அவர்கள் தம்பி இயக்கும் டி50 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்று வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இயக்குநர் செல்வராகவன் இதுவரை சாணிக்காயிதம், பீஸ்ட், பகாசூரன், நானே வருவேன், ஃபர்ஹானா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகர் விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் தனுஷ் அவர்களை தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்து அவருடைய வெற்றிக்கு பின்னால் இருந்த இயக்குநர் செல்வராகவன் அவர்கள் தற்பொழுது நடிகர் தனுஷ் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.