அண்ணாத்த திரைப்படம்! ரஜினிகாந்தின் கண்டிஷன்!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

விவேகம், வீரம், விசுவாசம், மற்றும் வேதாளம், போன்ற திரைப்படங்களை இயக்கிய சிவா அவர்களின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தான் அண்ணாத்த நயன்தாரா கீர்த்தி சுரேஷ், மீனா, மற்றும் குஷ்பு, உள்ளிட்டோர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து வருகிறார்கள் கொரோனாவிற்கு முன்பாகவே முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து இருந்தார் நடிகர் ரஜினிகாந்த். கொரோனாவிற்கு பின்னர் இந்த படப்பிடிப்பை ஆரம்பிப்பதற்கு சிக்கல் இருந்து வந்தது. ஏனென்றால், தடுப்பூசி கண்டுபிடித்த பின்னர் படப்பிடிப்பை நடத்தலாம் என தெரிவித்து வந்தார்கள். ரஜினி அவர்கள் காலத்தின் கட்டாயம் காரணமாக இப்பொழுது படபடப்பில் கலந்துகொண்டு வருகின்றார். ரஜினிகாந்த் முன்னரே 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், மீதமிருக்கும் 40 சதவீத படப்பிடிப்பு இப்போது நடந்து வருகின்றது. ஹைதராபாத்தில் இருக்கின்ற ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கின்றது.

படப்பிடிப்பு ஆரம்பிக்க தயங்கியவர், இப்பொழுது ஒரு புது கண்டிஷனைப் போட்டிருக்கிறார். படப்பிடிப்பை விரைவாக முடித்துவிட்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதிக்குள் அவருடைய டப்பிங் வேலைகளை முடித்துவிட வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார். ரஜினிகாந்த் ஒரு நடிகர் படிப்பை முடித்தால் மட்டும் போதாது டப்பிங்கும் முடித்துக் கொடுத்தால் தான் ஒரு திரைப்படத்தில் நடிகருக்கான முழுமையான பணி முடிவடையும்.

விரைவாக படத்தை முடிக்க வேண்டும், என ரஜினிகாந்த் தெரிவித்ததற்கு இரு காரணங்கள் இருக்கின்றது. ஒன்று தேர்தல் நெருங்கி வருவதால் கட்சிப் பணிகளை கவனிக்கவும் பிரச்சாரத்திற்கு தயாராவதற்க்காகவும் படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார். இன்னொரு காரணம் அண்ணாத்த திரைப்படத்தில் ஷெட்யூல் சம்பளம் என்று தெரிவித்து இருக்கிறார்கள். அதாவது ஷெட்யூல் முடிந்தால் மட்டுமே சம்பளம் கைக்கு வரும் இதுவரையில், ரஜினிகாந்த் அவர்களுக்கு 30 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து விட்டிருக்கின்றது. மீதம் இருக்கின்ற 70 கோடி ரூபாய் கைக்கு வர வேண்டும் என்று தெரிவித்தால் ஷெட்யூல் முடிந்தால்தான் வரும் படப்பிடிப்பை விரைவாக முடிக்க இதுவும் ஒரு காரணம் என்று தெரிவிக்கிறார்கள்.

Leave a Comment