அண்ணாத்த படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்! ரஜினிக்கு கொரோனாவா?

Photo of author

By Sakthi

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு திடீரென்று நிறுத்தப்பட்டிருக்கின்றது.

விஸ்வாசம், விவேகம், வீரம், மற்றும் வேதாளம், போன்ற திரைப்படங்களை அஜித்தை வைத்து இயக்கிய சிவா, இப்பொழுது நடிகர் ரஜினிகாந்தை வைத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக இயக்கி வரும் திரைப்படம்தான் அண்ணாத்த,நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், போன்ற பலர் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

கொரோனாவிற்கு முன்பு படத்திற்கான 40 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அதன் பிறகு இப்போது படப்பிடிப்பு ஆரம்பமானது ஹைதராபாத்தில் இருக்கின்ற ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்து வந்தது. தேர்தல் காரணமாக படப்பிடிப்பு விரைவாக முடிக்க திட்டமிட்டு வேகமாக படப்பிடிப்பு நடந்து வந்தது. ஒவ்வொரு நாளும் 14 மணிநேரம் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வந்தார் நடிகர் ரஜினிகாந்த்.

இந்த நிலையில், அண்ணாத்த படபிடிப்பு ரத்தாகி இருக்கின்றது. படப்பிடிப்பில் இருக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை வழக்கமாக எடுக்கப்படும் அவ்வாறு படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களில் 8 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருக்கின்றது.

அண்ணாத்த திரைப்படத்தின் ஒட்டுமொத்த படக்குழுவும் சென்னை திரும்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. படப்பிடிப்பிலிருந்த 8 நபர்களுக்கு தொற்று இருப்பது மட்டுமல்லாமல், ரஜினிகாந்த் அவர்களுக்கும் உடல் நலம் இல்லாத காரணத்தால், படப்பிடிப்பை தொடர்ச்சியாக நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது என்று தெரிவிக்கிறார்கள்.

கூடுதலாக ரஜினிகாந்த் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். அவ்வாறு ரஜினிகாந்த் அவர்களுக்கு பரிசோதனை செய்தபோது, நெகட்டிவ் என்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன .அதுமட்டுமல்லாமல் ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு ஹைதராபாத்தில் தற்போது இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.