பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வழங்கும் தேதி அறிவிப்பு!!

Photo of author

By Pavithra

பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வழங்கும் தேதி அறிவிப்பு!!

Pavithra

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி கல்லூரிகள் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டது.இதனால் பத்தாம் வகுப்பு தேர்வு முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் பாதியிலும் விடுபட்டன.மேலும் இந்த தேர்வுகளை நடத்த இரண்டுக்கும் மேற்பட்ட தடவை தேதிகள் அறிவித்தும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது இதனால் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு அரையாண்டு மதிப்பெண்களின் சராசரியையும் வருகைப் பதிவேட்டின் மதிப்பெண்ணையும் வைத்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டது.சமீபத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்குவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரம் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கும் அடுத்த மாதம் மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட உள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.