கொரோனா பரவல் அதிகரிப்பு; பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

0
11

உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த நிலையில் தடுப்பூசி போடப்பட்டு படிப்படியாக கொரோனா தாக்கம் குறைந்தது. கொரோனா பரவல் அதிகரித்ததால் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொரோனா பாதிப்பில் ஏராளமான மக்கள் உயிரிழந்த நிலையில் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து மீண்டு வந்தனர். அதன் பிறகு கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகின்றது.

இந்தியாவில் 3000 மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் 215 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில் ஜூன் இரண்டாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் பள்ளிகளில் மாஸ்க் அணிய உத்தரவிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று பாதிப்பு அதிகம் காணப்படவில்லை என்றாலும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேவைப்பட்டால் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் மாஸ் கனிந்து வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பள்ளிகளில் உள்ள குடிநீர் தொட்டிகள் மற்றும் கழிவறைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதினால் தமிழகத்தில் பெரும்பாலான மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Previous articleமகளிர் உரிமை தொகை வழங்குவதில் திடீர் மாற்றம்; அரசு சொன்ன ஷாக் நியூஸ்!!
Next articleஓய்வூதியதாரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மு.க ஸ்டாலின்..முழு விவரம் இங்கே!!