மேலும் ஒரு படகு விபத்தால் மக்கள் பலி!! சோகத்தில் மூழ்கிய நாட்டு மக்கள்!

மேலும் ஒரு படகு விபத்தால் மக்கள் பலி!! சோகத்தில் மூழ்கிய நாட்டு மக்கள்!!
கேரள மாநிலத்தில் நடந்த படகு விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து நைஜீரியா நாட்டில் படகு கவிழ்ந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தால் நைஜீரியா நாட்டு மக்களை சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
கேரளா மாநிலம் மலப்புரம் அருகே சில தினங்களுக்கு முன்னர் சுற்றுலா பயணிகளை ஏற்றி கடலுக்குள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் கேரள மாநிலத்தை மட்டுமில்லாமல் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து இதே போல நைஜீரியா நாட்டில் நடந்துள்ளது.
நைஜீரியா நாட்டின் சோகோடா என்ற பகுதியில் விறகுகளை எடுக்க 20 பேர் ஒரு படகில் சென்றுள்ளனர். ஆற்றின் நடுவே படகு சென்று கொண்டிருந்த போது எதிர் பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படகு ஆற்றினுள் மூழ்கியது.
இதில் பயணம் செய்த 20 பேரும் ஆற்றினுள் மூழ்கினர். சம்பவத்தை அறிந்த மீட்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படகில் பயணித்த 15 சிறுவர்கள் உட்பட 17 பேர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 3 பேர்களின் உடல்களை தேடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 15 பேர்கள் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.