Breaking News

திமுக கூட்டணியில் மேலும் ஒரு விரிசல்.. விலகும் முக்கிய கட்சி!! ஸ்டாலின் கையில் இறுதி முடிவு!!

Another crack in the DMK alliance.. the main party to quit!! Final decision in Stalin's hands!!

DMK MDMK: இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதற்கான பணிகளும் பரபரப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக 2026 தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தன் வசப்படுத்தி வைக்க வேண்டுமென பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதற்காக மக்களுக்கு செயல்படுத்திய திட்டத்தை அவர்களுக்கு மீண்டும் நியாபகப்படுத்தும் விதமாக சில நிகழ்ச்சிகளை நடத்துவது, விடுபட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவது போன்ற பல்வேறு விசியங்கள் அரங்கேறி வருகின்றன.

மேலும் கூட்டணி கட்சிகளிடமும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 மாதம் மட்டுமே இருக்கும் நிலையில், திமுகவின் கூட்டணி கட்சிகள் ஸ்டாலினிடம் வைக்கும் நிபந்தனைகள் ஸ்டாலினுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புதிய கட்சியான தவெகவும், திமுகவை கடுமையாக எதிர்த்து வருவது ஸ்டாலினுக்கு சிக்கலை அதிகப்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலையில் தான் திமுக கூட்டணியிலிருக்கும் கட்சியான மதிமுக அக்கட்சியிலிருந்து விலகுவதற்கான சாத்திய கூறுகள் அதிகளவில் உள்ளது என்று சொல்லப்படுகிறது.

ஏனென்றால் மதிமுகவின் முக்கிய முகமான இருந்த மல்லை சத்யா வைகோ உடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து திராவிட வெற்றிக் கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்த மல்லை சத்யா, செய்தியாளர் சந்திப்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் திராவிட வெற்றிக் கழகம் நிச்சயம் பங்கேற்கும் என்றும், ஸ்டாலின் சம்மதித்தால் திமுக உடன் கூட்டணி சேர்ந்து பணியாற்றுவோம் என்று கூறினார். இவரின் இந்த கருத்து கூட்டணியில் சலலசலப்பை ஏற்படுத்தும் நோக்கிலேயே அமைந்துள்ளது.

மல்லை சத்யாவுக்கும், வைகோவுக்கும் சச்சரவு பெருகி கொண்டே சென்றதால் தான் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இவ்வாறு இருக்கும்  சமயத்தில் இவரை திமுக கூட்டணியில் சேர்ப்பதை வைகோ கடுமையாக எதிர்ப்பார். மேலும் மல்லை சத்யா திமுக கூட்டணியில் சேர்ந்தால், மதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறவும் வாய்ப்புகள் உள்ளது. இவர்கள் இருவரும் திமுகவிற்கு மிகவும் முக்கியம் என்பதால் ஸ்டாலின் என்ன முடிவு எடுப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.