புஷ்பா 2 படத்தில் சமந்தாவுக்கு பதில்!!நடனமாடும் தென்னக அழகி இவர்தானா!!

Photo of author

By Jeevitha

Cinema News: புஷ்பா 2 படத்தில் சமந்தாவுக்கு பதிலாக போட்டியாக வேறு ஒரு பிரபல நடிகை வந்துள்ளார். அவர் தான் ஸ்ரீலீலா.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்தது. உலகம் முழுவதும் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்ற புஷ்பா படத்தில்  2வது பாகம்  திரைப்படம் பிரமாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

அந்த நிலையில் முதல் பாகத்தில் பிரபல நடிகை சமந்தா நடனமாடி உள்ளார். ஆனால் அவர் சில நாட்களுக்கு முன்பு புதிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டதால் இந்த படத்தில் அவர் நடனமாட மாட்டார் என கூறப்படுகிறது. அதை தொடர்ந்து தற்போது தென்னிந்திய திரையுலகில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர்  ஸ்ரீலீலா. இவர் நடித்திருந்த ஒரு படத்தில் வெளியான நடனத்தால் இந்திய அளவில் மிகவும் பிரபலமானார்.

இதனால் இவருக்கு அதிக அளவில் வாய்ப்புகள் வரிசையாக வருகின்றது. அந்த நிலையில் இவர் தற்போது புஷ்பா 2 படத்தில ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இது மட்டும் அல்லாமல் இவர் தமிழ் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. புறநானூறு திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க, அதில் அதர்வா அவருக்கு தம்பியாக நடிக்க உள்ளார். அந்த திரைப்படத்தில் அதர்வா-க்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.