முன்னாள் அமைச்சருக்கு மீண்டும் சம்மன் அனுப்பிய லஞ்ச ஒழிப்பு துறை!

Photo of author

By Hasini

முன்னாள் அமைச்சருக்கு மீண்டும் சம்மன் அனுப்பிய லஞ்ச ஒழிப்பு துறை!

தற்போது திமுக ஆட்சி அமைத்ததை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்களான அதிமுக அரசவையில் இருந்த பல அமைச்சர்கள் வீட்டில் ஒருவர் பின் ஒருவராக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். நேற்று சி. விஜயபாஸ்கர் வீட்டில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஏற்கனவே கடந்த ஜூலை மாதத்தில் எம். ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

தற்போது அவருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டுமொரு சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 25-ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை தலைமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், சோதனை நடத்தப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி அவரை வர சொல்லி லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

ஆனால் அவரோ அப்போது உள்ளாட்சித் தேர்தல் பணிகள் காரணமாக, தன்னால் நேரில் ஆஜராக முடியாது என எம்.ஆர். விஜயபாஸ்கர் லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார் என்பது நினைவு கூறத்தக்கது. அதன்காரணமாக தற்போது மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பி இந்த மாதம் 25 ம் தேதி ஆஜராகும்படி அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.