அமெரிக்காவின் “நியூயார்க் மாநிலத்தின் கவர்னர் கேத்தி ஹோச்சுல்”, திருமணத்தை மீறிய உறவில் இருப்பது குற்றமாக கருதப்படாது என்னும் மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார். “100 “ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட சட்டம் தான் கணவனுக்கு தெரியாமல் மனைவியோ அல்லது மனைவிக்கு தெரியாமல் கணவனோ திருமணத்தை மீறிய உறவில் இருப்பது குற்றமாகக் கருதப்பட்டது. இவ்வாறு யாருடனும் உடலுறவில் இருந்தால் அதை குற்றமாக கருதி அவர்களுக்கு “3” மாத காலம் சிறை தண்டனை வழங்கப்படும்.
இந்த சட்டம் “1907” ஆம் ஆண்டு இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. இந்த சட்டத்தினால் சிறை சென்றவர்கள் எண்ணிக்கை “1972” முதல் கணக்கில் கொண்டால் “5 நபர்கள்” மட்டுமே. இந்நிலையில் தான் “நியூயார்க் மாநில கவர்னர்” இதனை ரத்து செய்யும் மசோதாவை நிறைவேற்றியுள்ளார். இந்த மசோதா ரத்து செய்யப்பட்ட நிலையில், இனி திருமணம் ஆனவர்கள் தங்கள் துணைக்கு தெரியாமல் வேறொரு நபருடன் உடலுறவு கொள்வது குற்றமாக கருதப்படாது.
இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டாலும், உண்மையான திருமண உறவு என்பது ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமலும், ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையிலும் மட்டுமே திருமண வாழ்க்கையின் சந்தோஷம் அடங்கியிருக்கிறது என்பது யாவரும் அறிந்ததே.