முப்பெரும் தேவியர்கள்!

0
140

துர்கை

துர்க்கை நெருப்பின் அழகு ஆவேச பார்வையுடன் அழகாக இருக்கிறார். வீரத்தின் தெய்வம், சிவப்பிரியை இச்சா சக்தி என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். இந்த அம்மனை கொற்றவை என்றும் காளி என்றும் குறிப்பிடுகிறார்கள். வீரர்களில் போரின் தொடக்கத்திலும், முடிவிலும் துர்க்கையை வழிபடுவார்கள்.

மகேசன் என்ற எருது வடிவம் கொண்ட அசுரனுடன் துர்க்கை 9 நாள் போரிட்டாள் இவையே நவராத்திரி என்று சொல்லப்படுகிறது. அவனை முகம் செய்து பத்தாம் நாள் விஜயதசமிகுசனை அதைத்தவள் மகிஷாசுரமர்த்தினி.

மகிஷாசுரமர்த்தினியின் திருக்கோலம் மாமல்லபுரத்தில் சிற்ப வடிவத்தில் இருக்கிறது.

நவ துர்க்கை

வன துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, ஜ்வாலா துர்க்கை, சாந்தி துர்க்கை, சபரி துர்க்கை, தீப துர்க்கை, ஆசுரி துர்க்கை, லவனதுர்க்கை இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.

முதல் மூன்று நாள் நிவேதன விநியோகம்.

வெண்பொங்கல், புளியோதரை, சர்க்கரை பொங்கல்.

லட்சுமி

லட்சுமி மலரின் அழகு அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறார். செல்வத்தின் தெய்வம் விஷ்ணு பிரியை. கிரியா சக்தி என்றும் அழைப்பதுண்டு.

லட்சுமி அமுதத்துடன் தோன்றியவர் உன்னிட மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறார்.

இவரை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகின்றனர் முக்கியமாக இவள் செல்வ வளம் கொடுத்து வறுமையை அகற்றி அருள் புரிபவள்.

இவருக்கு தனி கோவில் இருக்குமிடம் திருப்பதியிலுள்ள திருச்சாணுர்.

அஷ்டலட்சுமிகள்

ஆதிலட்சுமி, மகாலட்சுமி, தனலட்சுமி, தானிய லட்சுமி சந்தான லட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி, கஜலட்சுமி இவர்கள் லட்சுமியின் அம்சங்கள் என்று சொல்லப்படுகிறது.

இடை மூன்று நாள் நிவேதன விநியோகம்

கதம்ப அன்னம், தயிர் சாதம், தேங்காய் சாதம்.

சரஸ்வதி

சரஸ்வதி வைரத்தின் அழகு அமைதி பார்வையுடன் அழகாக பிரகாசிக்கிறார். கல்வியின் தெய்வம், பிரம்மப்பிரியை ஞான சக்தி என்றும் அழைக்கப்படுகிறார்.

சரஸ்வதியை ஆற்றங்கரை சொற் கிழத்தி என்று தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன. இவருக்கு தனிக்கோவில் இருக்கும் இடம் நாகை மாவட்டத்திலுள்ள கூத்தனூர்.

விஜயதசமி

ஒன்பது தினங்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி 10ம் நாள் அவனை வெற்றி கொண்டார். இந்த நாளை விஜயதசமி வெற்றி தருகிற 10ம் நாள்.

பல குழந்தைகளின் வித்யாராம்பம் இன்று தான் ஆரம்பம்.

இன்று தொடங்கும் அனைத்து நல்ல காரியங்களுக்கும் வெற்றி நிச்சயம் நவராத்திரி 10 நாட்களும் வழிபாடு செய்ய இயலாதவர்கள் சப்தமி மகா அஷ்டமி மகா நவமி உள்ளிட்ட மூன்று தினங்களிலாவது தேவியை வழிபாடு செய்யலாம்.

அதுவும் முடியாதவர்கள் மகா அஷ்டமி நாளன்று நிச்சயமாக தேவியை வழிபாடு செய்ய வேண்டும்.

அஷ்ட சரஸ்வதிகள்

வாகீஸ்வரி, சித்தரேஸ்வரி, துலாஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி.

கடைசி மூன்று நாட்கள் நிவேதன விநியோகம். எலுமிச்சை சாதம், பாயாசம், அக்கார அடிசில்.

Previous articleடீ , காபி பதில் இனிமே இதை குடித்து பாருங்க! மலச்சிக்கல் மூட்டு வலி இருக்காது!
Next articleஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு கஷாயம்! நீண்ட நாள் வாழ இத செய்யுங்க!