மாணவியின் ஆபாச படத்தை பேஸ்புக்கில் பதிவு! ஆப்பிள் நிறுவனம் 35 கோடி இழப்பீடு!

Photo of author

By Kowsalya

அமெரிக்காவில் உள்ள ஒரு மாணவியின் ஆபாசபடம் முகநூலில் பரவியதை அடுத்து ஆப்பிள் நிறுவனம் அந்த பெண்ணிற்கு 35 கோடி இழப்பீடு தந்துள்ளது.

 

ஐபோன்களில் ஏதாவது ஒரு பழுது ஏற்பட்டால் அதை நீக்குவதற்கு அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெகட்ரான் என்ற நிறுவனம் ஐபோன்களில் உள்ள பழுதை நீக்கி தரும் தொழிலை எடுத்து செய்து வருகிறது.

 

இங்கு ஒரு மாணவி ஒருவர் தனது ஐபோன் பழுதடைந்து விட்டதால் அதை பழுது பார்ப்பதற்காக இந்த பெக்கட்ரான் நிறுவனத்தில் கொடுத்துள்ளார். இதனை இரண்டு பொறியாளர்கள் பழுது பார்த்து உள்ளனர். அப்பொழுது அந்த ஐபோனில் அந்த மாணவியின் ஆபாசபடம் ஒன்று இருந்துள்ளது. அதை அவர்கள் பார்த்து ரசித்து விடுவதோடு மட்டும் இல்லாமல் அதை அந்த மாணவியின் முகநூலிலேயே பதிவிட்டுள்ளனர்.

 

இதை பார்த்த அந்தப் பெண்ணின் சக தோழர்கள் அந்த மாணவியிடம் தெரிவித்துள்ளனர். இதனால் மிகவும் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி என்ன செய்வதென்று தெரியாமல் வழக்கறிஞரின் உதவியை நாடினார்.

 

மேலும் அவர்கள் பெகட்ரான் நிறுவனத்திடம் பல கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு உள்ளனர். ஆனால் அந்நிறுவனம் அதை தர மறுத்துவிட்டது. பெகட்ரான் நிறுவனம் இந்த பிரச்சனையை மறைக்க முயற்சித்த பொழுது, பிறகு இந்த தகவலை அறிந்த ஆப்பிள் நிறுவனம் பெகட்ரான் நிறுவனத்தின் மூலமே 35 கோடி ரூபாயை இழப்பீடாக கொடுத்துள்ளது. இப்படி தனக்கு நேரடி தொடர்பு இல்லாத மற்ற விவகாரத்திலும் ஆப்பிள் நிறுவனம் இழப்பீடுகளை தந்து தனது பெயரை காப்பாற்றிக் கொள்வது நடைபெறுகிறது. சமீபத்தில் கூட இந்த மாதிரி ஒரு பிரச்சனைக்கு ஆப்பிள் நிறுவனம் இழப்பீடு வழங்கியது குறிப்பிடத்தக்கது. ஆபாச படத்தை முகநூலில் பதிவிட்டு இரண்டு பொறியாளர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் அளித்த நிறுவனமும், அந்த தனியார் நிறுவனம் செய்யும் சட்ட விரோதமான செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்.