ஓபன் ஏ.ஐ நிறுவனத்துடன் இணையும் ஆப்பிள்! 13 பில்லியன் டாலர்கள் கேக்கும் பிரபல நிறுவனம்!

Photo of author

By Sakthi

ஓபன் ஏ.ஐ நிறுவனத்துடன் இணையும் ஆப்பிள்! 13 பில்லியன் டாலர்கள் கேக்கும் பிரபல நிறுவனம்!

பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் பிரபல செய்யறிவு அதாவது ஏ.ஐ நிறுவனமான ஓபன் ஏ.ஐ நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இதற்காக பிரபல நிறுவனம் ஒன்று ஓபன் ஏ.ஐ நிறுவனத்தின் வருங்கால லாபத்தில் 13 பில்லியன் டாலர் கேட்டுள்ளது. இந்த தகவல் பயனர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கின்றது.

அதாவது ஆப்பிள் நிறுவனத்தின் இயங்குதளமான ஐ.ஒ.எஸ் இயங்குதளத்தில் ஓபன் ஏ.ஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி தொழில்நுட்பம் அறிமுகமாகவுள்ளது என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஜூன் 10ம் தேதி நடக்கவுள்ள ஆப்பிள் தொழில்நுட்ப உருவாக்குநர்கள் மாநாட்டில் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

ஆப்பிள் நிறுவனமும் ஓபன் ஏ.ஐ நிறுவனமும் இணையும் இந்த உடன்பாட்டின்படி இந்த சாட் ஜிபிடி தொழில்நுட்பத்தை ஆப்பிள் நிறுவனத்தின் ஏ.ஐ தொழில் நுட்பமான சிரியுடன் இணைத்து செயல்படுத்த வாய்ப்பு உள்ளது.

மேலும் சாட் ஜிபிடியின் வளர்ச்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் தரவு மையங்களை சாட் ஜிபிடிக்கு வழங்கி இருக்கின்றது. இதையடுத்து ஆப்பிள் பயனர்களுக்கு மேலும் ஒரு தளத்தை பயன்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறலாம்.

அதாவது சாட் ஜிபிடியுடன் மைக்ரோசாப்ட் தொழில்நுட்பம் இணைந்துள்ளது. இதையடுத்து சாட் ஜிபிடி தொழில்நுட்பம் ஆப்பிள் நிறுவனத்துடன் இணையும் பொழுது சாட் ஜிபிடியின் வாயிலாக ஆப்பிள் பயனர்கள் மைக்ரோசாப்ட் தளத்தின் தரவு மையங்களை பயன்படுத்த தெடங்குவார்கள்.

இந்த உடன்பாட்டின் மூலம் ஏற்படும் லாபத்தில் ஓபன் ஏ.ஐ நிறுவனத்திடம் 13 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வேண்டும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் கோரியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் ஆப்பிள் நிறுவனமும் பயனர்களுடைய தரவுகளின் வாயிலாக ஏ.ஐ தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் ஓபன் ஏ.ஐ நிறுவனமும் இணைவது விவகாரமானஒன்று என தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவரும் கூறுகின்றனர். மேலும் இந்த தகவல் பயனர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கின்றது.