புதிய ரேஷன் கார்டு நகல்; தமிழக அரசு சொன்ன அப்டேட்!

0
36

இந்தியாவில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரேஷன் அட்டை என்பது மிக முக்கிய ஆவணமாக இருக்கின்றது. ரேஷன் கார்டு இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பெற்று வருகின்றனர். மேலும் ரேஷன் கார்டு இருந்தால் தான் நாம் ஒரு இடத்தில் வசிக்கிறோம் என்பதை உறுதியாக கூற முடியும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு சார்பாக வழங்கப்படும் சலுகைகள் அனைத்தையும் ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே பெற முடியும். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தற்போது மகளிர் உரிமைக்காக திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில் ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மட்டும் தான் இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் திருத்தம் செய்யப்பட்டதும் அவர்களுக்கு நகல் வழங்கும் திட்டம் முன்னதாகவே தமிழகத்தில் அமலில் இருக்கும் நிலையில் இதுவரை 10 லட்சம் நகல் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. புதிய நகல் கார்டு வேண்டும் என விரும்புவோர் www.tnpds.gov.in என்ஜாய் இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் நகல் அட்டைகள் தபாலுக்கு பணம் செலுத்தினால் வீட்டுக்கே தபாலில் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் அட்டையின் மூலம் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் பொற்கால் வழங்கப்பட்டு வருகின்றது. இதில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் தற்போது கண் கருவிழி பதிவு மற்றும் கைரேகை பதிவின் மூலம் மக்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றது.

முன்பிருந்தது போல மாநிலம் மற்றும் மத்திய அரசு வழங்கும் பொருட்களுக்கு இரண்டு முறைகள் கைரேகை பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஒருமுறை கைரேகை பதிவு செய்தால் போதும் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுபோன்ற பல்வேறு மாற்றங்கள் ரேஷன் அட்டையில் செய்யப்பட்டு வரும் நிலையில் புதிய ரேஷன் அட்டை நகல் பெற விரும்புபவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்

Previous articleதிடீரென ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா! தாக்குதலுக்கு பயன்படுத்திய அதிபயங்கர ஆயுதங்கள்  
Next articleகலைஞர் மகளிர் உரிமைத்தொகை; பெண்களே இத கவனிச்சுக்கோங்க!